TamilSaaga

Exclusive : “சிங்கப்பூர் செல்ல ஏர்போர்ட் வந்ததுக்கு அப்புறம் ‘கேன்சல்’-னு சொல்றாங்க”.. ஒவ்வொரு ‘திங்களும்’ இதே பிரச்சனை தான் – ஏர் இந்தியா மீது குவியும் புகார்

சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையே பல விமான சேவை நிறுவனங்கள் தற்போது சேவைகளை அளித்து வருகின்றன என்பது நாம் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக சிங்கப்பூர் வழங்கும் VTL சேவைகள் பல காரணிகளால் தடைப்பட்டிருந்த நிலையிலும் Travel Bubble என்று அழைக்கப்படும் NON VTL சேவைகள் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Indigo மற்றும் Air India Express போன்ற விமான சேவை நிறுவனங்கள் சிறப்பான முறையில் இன்றளவும் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

சாங்கி ஏர்போர்ட்டில் “Assistant Operator”-ஆக பணிபுரியும் தமிழர் – “போலி FB ஐடி”யில் பணம் கேட்கும் மோசடி கும்பல் – “அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா மாப்ள?” என கலாய்க்கும் நண்பர்கள்

கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் VTL சேவைகள் இயங்கி வரும் நிலையில் சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையே தடையின்றி விமான போக்குவரத்து செயல்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கு கூடுதல் சிறப்பாக பல தளர்வுகளையும் சிங்கப்பூர் அரசு வழங்கி வருகின்றது. S Pass, Dependent Pass, Long Time Pass மற்றும் Employment Pass மூலம் தமிழகம் உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து வருபவர்கள் Entry Approval எடுக்காமல் வந்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Changi விமான நிலையத்தில் அவர்களுக்கு PCR சோதனையிலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

எல்லாம் நல்ல முறையில் நடந்து வரும் இந்த நேரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் வாரம்தோறும் அனைத்து திங்கள் கிழமைகளிலும் சிங்கப்பூர் மற்றும் சென்னை மார்க்கமாக இயக்கும் விமானம் தொடர்ந்து ரத்து செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கான முன்னறிவிப்பு அளிக்காமல் இந்த ரத்து நடவடிக்கை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வாரமும் நேற்று திங்கள் கிழமையும் இந்த விமானம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டது. முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பயணம் செய்ய விமான நிலையம் சென்ற பிறகே விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவருவதால் பயணிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மாற்று விமானங்கள் கேட்போருக்கும் டெல்லி மார்கமாக மட்டுமே விமானங்கள் அளிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. Refund பெறுவதற்கும் மக்கள் சில சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். எதிர்வரும் திங்கள் கிழமையும் இந்த விமானம் சிங்கப்பூர் சென்னை மார்க்கமாக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூரில் வேலை தேடி வந்த 13 வயது சிறுமி” : பணத்தாசை காட்டி நாசம் செய்த “காமக் கொடூரன்” – கோர்ட் எடுத்த முடிவு சரிதான்!

பயணிகளுக்கு சேவை ரத்தாவது குறித்து முன்கூடியே தெரிவித்தால் பலனளிக்கும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தீடீர் சேவை ரத்தால் Refund, Date Change உள்ளிட்ட பிரச்சனைகளும் நடக்கின்றது, ஆகையால் அதையும் சரிசெய்து தருமாறு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts