TamilSaaga

‘சிங்கப்பூரில் ஈரச்சந்தைகளில் Trace Together கட்டாயமாக்கப்படும்’ – சுகாதார அமைச்சகம்

சிங்கப்பூரில் Trace Together செயலியில் இருந்து பலர் விலகுவதால், கிருமி தொற்று உறுதியானவர்களிடம் அதிக அளவில் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இந்த செயல் நாட்டில் மீண்டும் கிருமி பரவளின் அளவை மீண்டும் அதிகரிக்கும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். Trace Together மற்றும் Safe Entry போன்ற செயலிகள் கிருமி தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களை குறித்து மிகச்சரியான தகவலை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து ஈரச்சந்தைகள் மற்றும் hawker மையங்களில் கட்டாயமானாக Trace Together இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் வாரத்தாரிற்குள் இதற்கான முன்னெடுப்புகள் நடைபெறும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

ஈரச்சந்தைகள் மற்றும் ஹாக்கர் மையங்களில் மக்கள் பலர் கூடுவதாலும் குறிப்பாக முதியவர்கள் பலர் அங்கு வருவதாலும் Trace Togetherன் அவசியம் அங்கு அதிகம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts