சிங்கப்பூர் அரசு இங்கு வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணிப்பெண்களை அவ்வப்போது சிங்கப்பூரில் உள்ள பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வது வழக்கம். வீட்டையும், நாட்டையும் விட்டு வெகுதொலைவில் அவர்கள் வசித்துவரும் நிலையில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகமும் இன்னும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல நிகழ்வுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் HIA என்று அழைக்கப்படும் Hope Initiative Alliance (HIA) என்று நிறுவனம் சுமார் 100 வீட்டு பணிப்பெண்களுக்கான சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது. நேற்று ஞாயிற்று கிழமை காலை சிங்கப்பூரில் புகழ்பெற்ற S.E.A Aquarium அரங்கிற்கு பணிப்பெண்கள் அழைத்து செல்லப்பட்டனர். பலருக்கு அங்கு செல்வது இதுவே முதல் முறையென்பது அவர்கள் கண்களில் கண்ட பிரம்மிப்பில் தெரிந்தது.
சிங்கப்பூரில் வரவிருக்கும் சீன புத்தாண்டை முன்னிட்டு இந்த வாராந்திர முன்முயற்சி இந்த ஆண்டு ஜனவரி 23 அன்று தொடங்கியது. மற்றும் 1,500 வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை மற்றும் நகர சுற்றுப்பயணம் உள்ளிட்ட ஆர்வமுள்ள இடங்களுக்கு 10 வாரங்களுக்குள் அழைத்துச் செல்லவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. வீட்டுப் பணியாளர்களின் நலன் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் வருகின்ற மார்ச் 2022 இறுதி வரை நடைபெறும் என்று HIA அறிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, கிட்டத்தட்ட 160 பணிப்பெண்கள் S.E.A மீன்கள் கண்காட்சியை கண்டுகளித்தனர். 1,500 வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கான சுற்றுப்பயணங்கள், மதிய உணவு மற்றும் போக்குவரத்து உட்பட, பயன்படுத்தப்படாத சிங்கப்பூர் ரெடிஸ்கவர்ஸ் வவுச்சர்களால் நிதியளிக்கப்படுகிறது. அவை பொது உறுப்பினர்கள் டிராவல் ஏஜென்சியான எக்ஸ்பீரியன்ஸ் டிஎம்சிக்கு நன்கொடையாக அளித்தன.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த ஒரு பணிப்பெண், S.E.A விற்குள் நுழைந்ததும் தனது இந்தோனேஷியா குடும்பத்திற்கு வீடியோ கால் செய்து S.E.Aவின் அழகை பார்கிர்ந்துகொண்டார், எனது சொந்தங்கள் இங்கு இல்லையென்றாலும் இந்த அழகை அவர்களை வீடியோ கால் மூலம் ரசித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் 46 வயதான லிலிக்.