TamilSaaga

2023ன் ஆண்டின் மிகப்பெரிய layoffs செய்யும் மைக்ரோசாப்ட்… 10000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறதாம்… இந்திய ஊழியர்களின் நிலை?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2023ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே மிகப்பெரிய layoffs செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த பின்னணி தகவல்களை விசாரிக்கும் போது அதிர்ச்சியான சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

மைக்ரோசாப்ட் தனது காலாண்டு வருவாயை அடுத்த வாரம் அறிவிக்க இருக்கும் நிலையில், ஜனவரி 19 அன்று தனது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

220,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் என்ஜினியரிங் பிரிவை குறிவைத்து அதிக பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி விற்பனை, விண்டோஸ் உள்ளிட்ட சாப்ட்வேர் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே மைக்ரோசாப்டில் சரிவை சந்தித்து வந்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிகிரி படித்தவர்களும், படிக்காதவர்களும் ரெடியாக இருங்க… உங்களுக்கு சிங்கப்பூரில் சூப்பர் வேலை கிடைக்க இதை Follow பண்ணுங்க…

2022 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் தனது பணியாளர்களில் 1 சதவீதத்தை பணிநீக்கம் செய்தது. consulting and customer and partner solutions துறைகளில் அதிகப்படியான பணிநீக்கம் நடந்தது.

சிங்கப்பூரில் இருக்கும் பணியிடங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் கருத்து கூற மறுத்துவிட்டது. மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தொழில்நுட்பத் துறைக்கு இரண்டு ஆண்டுகள் சவாலாக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.

கடந்த வருடம் ட்விட்டர் பொறுப்பை கைப்பற்றிய எலான் மஸ்க் அதன் மொத்த பணியாளர்களில் 50 சதவீதத்தினரை வேலையை விட்டு நீக்கினார். அதை தொடர்ந்து, ஜனவரி 2023 நிலவரப்படி 18,000 ஊழியர்களை அமேசான் குறைத்துள்ளது. கடந்த வருடம் மெட்டா நிறுவனமும் மிகப்பெரிய layoffs செய்திருந்தது.

தொற்றுநோய் பரவலின் போது, அதிகப்படியான தொழில்நுட்ப வசதியை கருத்தில் கொண்டு அதிகப்படியான ஊழியர்களை பணியமர்த்தியதே இந்த அதிகப்படியான தொடர் layoffs காரணமாக பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts