TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இருக்கும் இளைஞரா நீங்க… இல்லை வேலையில் இருக்கும் ஊழியரா? அப்போ உங்க மொபைலில் கண்டிப்பா இந்த எண்களை Save பண்ணிக்கோங்க

வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு உழைக்க வெளிநாடு செல்ல நினைத்து தான் சிங்கப்பூருக்கு ஒவ்வொருவரும் வந்திருப்பார்கள். முக்கியமாக பலரும் சிங்கப்பூரினை தேர்ந்தெடுக்க காரணமே இங்கிருக்கும் பாதுகாப்பு தான்.

சிங்கப்பூர் அரசாங்கம் நம்மை காப்பது போல நாமும் நமது பாதுகாப்புக்கு சில விஷயங்களை செய்ய வேண்டியது முக்கியம். அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது மொபைல் போனில் நிச்சயம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க.

சிங்கப்பூர் MOM என அழைக்கப்படும் மனிதவளத்துறையிடம் ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பற்றிய உதவி மற்றும் இன்னும் பிற வேலை தொடர்பான விஷயங்கள் குறித்து அறிய 1800 339 5505 என்ற எண்ணை அழைத்து கொள்ள முடியும். மேலும், இது வெளிநாட்டு ஊழியர்களுக்கு தான் அதிகமாக பொருந்தும்.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை தொடர்புகொள்ள 6836 2618 என்ற எண்ணில் அழைக்கலாம். Foreign Domestic Worker Association for Social Support and Training என அழைக்கப்படும் FAST வெளிநாட்டில் இருந்து வீட்டு வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்களின் சங்கம். சிங்கப்பூரில் இருக்கும் போது சில பிரச்னைகளுக்கு அவர்களின் ஆதரவு மற்றும் பயிற்சி தேவைப்படும். அப்போது 1800 339 4357 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 2023ம் ஆண்டின் பொது விடுமுறை தினங்கள் என்னென்ன? முழு பட்டியலினை தெரிந்துக்கணுமா இத படிங்க

சிங்கப்பூரின் Samaritans of Singapore எனப்படும் SOS என்ற நிறுவனத்தை என்ற 1800 221 4444 எண்ணில் அழைக்க முடியும். Centre for Domestic Employees எனப்படும் CDE வீட்டுப் பணியாளர்களுக்கான மையம். அதை 1800 2255 233 என்ற எண்ணில் அழைக்கலாம்.

உயர் மறைமாவட்ட ஆணையம் வெளிநாட்டு மக்கள் மற்றும் பயணம் செய்யும் மக்கள் Archdiocesan Commission for the Pastoral Care of Migrants and Itinerant People என்ற குழுவை 9188 9162 என்ற இந்த எண்ணில் அழைக்கலாம்.

999 என்ற எண்ணில் சிங்கப்பூர் போலீசையும், 995 என்ற எண்ணில் சிங்கப்பூர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையை அழைக்க முடியும். இந்திய தூதரகத்தினை 9172 9803 என்ற எண்ணில் அழைக்கலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts