TamilSaaga

சிங்கப்பூரில் கையில் வாளுடன் அனைவரையும் மிரட்டிய நபர் : தடுக்கி விழுந்ததும் “வச்சு செய்த” பொதுமக்கள் – பிரம்படி கிடைக்க வாய்ப்பு

சிங்கப்பூரில் இன்று மார்ச் 14ம் தேதி பிற்பகல் நேரத்தில் புவாங்காக் கிரசன்ட் வழியாக சென்ற கார்கள் மற்றும் வழிப்போக்கர்களை நோக்கி நீண்ட வாளினை அபாயகரமான வகையில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இணையத்தில் பரவும் அந்த வீடியோக்களில், ஒரு டார்க் நிற டேங்க் டாப் மற்றும் நீண்ட பேன்ட் அணிந்திருந்த அந்த நபர், நீண்ட வாளுடன் சாலையில் நடந்து செல்வதையும், அந்த வழியாகச் செல்லும் பல கார்களின் மீது அதை வீசுவதையும் காண முடிந்தது.

Video Courtesy Sg Road Vigilante Singapore

“சிங்கப்பூரில் உறவுக்கார பெண் குளிப்பதை பார்க்க Spy Cam” : பொதுஇடங்களிலும் இதே வேலை – தலையில் தட்டி தூக்கிய சிங்கை போலீஸ்

பின்னர் அந்த பகுதியில் சாலையோரமாக போக்குவரத்துக்கு சிக்னலுக்காக காத்திருந்த ஒருவரை நோக்கி சென்று அந்த நபரின் கழுத்தை நோக்கி வாளினை வீசினார் அந்த ஆசாமி. திடுக்கிட்ட அவர் இருமுறை சுதாரித்த பிறகு பின்வாங்க, அந்த ஆசாமி கூடுதல் வேகத்துடன் அவரை அணுகினார். இறுதியில் அந்த ஆசாமி நிலை தடுமாறி வழுக்கி கீழே விழ அருகில் இருந்த வழிப்போக்கர்கள் ஒன்றுகூடி அவரை இருகப்பற்றிக்கொண்டனர்.

கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த மர்ம நபரின் கையில் இருந்து வாளை தள்ளிவிட்டதையும் வீடியோவில் காணமுடிந்தது. அருகில் இருந்த பல வழிப்போக்கர்கள் அவரை விட்டுவிடாமல் தரையில் அமுக்கி பிடித்திருந்த நிலையில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, புவாங்காக் சதுக்க ஷாப்பிங் சென்டருக்கு வெளியே அந்த நபர் குறைந்தது மூன்று கார்களை சேதப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த மர்ம நபரின் இந்த செயலால் பொதுமக்கள் இருவருக்கும் அந்த நபருக்கும் சிறு காயங்களுக்கு ஏற்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். இன்று மதியம் 1:55 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மிரட்டல் மற்றும் ஆயுதம் கொண்டு தாக்குதல் மற்றும் ஆயுதம் வைத்திருந்ததற்காக அந்த நபரை கைது செய்தனர்.

சிங்கப்பூர் வரும் புலம்பெயர்ந்த மக்கள்.. “எங்களோடு ஒருவராக ஒன்றிணைந்து வாழுங்கள்” – பாசத்தோடு கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ

அவரிடம் இருந்து அந்த வாள் கைப்பற்றப்பட்டது. மேற்கொண்டு இந்த வழக்கில் விசாரணைகள் நடந்து வருகின்றன. பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் ஆறு பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts