TamilSaaga

வளர்ந்த நாடுகளை “வாய பிளந்து பார்க்க வைக்கும்” இந்தியா செய்யவிருக்கும் சம்பவம்!

உலக அளவில் மக்கள் தொகை பெருகி கொண்டிருக்கையில் நாளுக்கு நாள் மக்களுக்கான தேவைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மக்கள் தொகையும் அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது போக்குவரத்து நெரிசல். இந்தியாவில் மக்கள் பல காரணங்களுக்காக நகரத்தை நோக்கி நகர்கின்றனர். வேலை, படிப்பு, மருத்துவம் இன்னும் இதர அடிப்படை தேவைகளுக்காக நகரத்தை நோக்கிய இந்த நகர்வு நடைபெறுகிறது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்சமான மக்கள் நகரத்தை நோக்கி புலம்பெயர்ந்து இருக்கின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்களாக இருப்பது டெல்லி, மும்பை, கொல்கட்டா மற்றும் சென்னை. இது தவிர இன்னும் ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய நகரங்கள் இருக்கின்றன.
நாளுக்கு நாள் நகரத்தை நோக்கிய புலம்பெயர்வு அதிகரிப்பதால் நகரங்களில் கடும் நெரிசல் காணப்படுகிறது. இவை போக்குவரத்துக்கு மிகப்பெரும் இடையூறாக இருக்கிறது.

குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அதிகமாக காணப்படும் நகரங்கள் நாளுக்கு நாள் அதிகபட்சமான போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றன. இதன் விளைவு, ஐந்து கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் செலவாகிறது. இதனால் நேர விரையம் மட்டுமல்லாமல் எரிபொருள் விரயம் என்பது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு பல மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் வசதிகள் என பல்வேறு வசதிகளை செய்த பின்னும் போக்குவரத்து நெரிசலில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. தற்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆம் நெரிசலன் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் கூறும் அதே வார்த்தைகள் தான். பறந்து தான் செல்ல போகிறோம்.

இந்தியாவில் வரும் 2025 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வரும் என மகேந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா அறிவித்துள்ளார். இந்த பதிவில் அந்த எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸிகளை பற்றி விரிவாக பார்க்கலாம். ePlane என்னும் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியை உருவாக்கியுள்ளது. சென்னையில் இருக்கும் IIT நிறுவனத்துடன் இந்த ePlane நிறுவனம் இணைந்து இந்த அற்புதத்தை உருவாக்கியுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸிகள் முழுமையாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் பொழுது உலகில் உள்ள வல்லரசு நாடுகள் அனைத்திற்கும் பெரும் ஆச்சாரத்தை ஏற்படுத்தும். தற்போது இந்த எலக்ட்ரிக்கல் பறக்கும் டாக்ஸியின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பறக்கும் டாக்ஸிகளை மட்டுமல்லாமல் ட்ரோன்களிலும் தங்களுடைய ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த எலக்ட்ரிக் ட்ரக்சிகளை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். அதுமட்டுமின்றி இதில் இருக்கும் அசாத்தியமான வசதிகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த பறக்கும் எலக்ட்ரிக் டாக்ஸி இரண்டு நபர்கள் பயணிக்க கூடியதாக இருக்கும். இது எலக்ட்ரிக் வாகனம் என்பதால் பேட்டரியில் தான் இயங்கும். இதனுடைய பேட்டரி கெப்பாசிட்டி 200 கிலோமீட்டர் வரை செல்லும். அதாவது ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் வரை செல்லும். இந்த வாகனத்தினுடைய payload 200 கிலோ கிராம்கள் , அதாவது 200 கிலோ வரை எடை தாங்கும். இதனால் குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கு இது வசதியாக இருக்கும். இந்த வாகன மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி ePlane நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படுவதால், இது இப்ளேன் இ200 என்று அழைக்கப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த பறக்கும் டாக்ஸி, சொந்த வாகனங்களில் செல்வதற்கு 60 நிமிடங்கள் ஆகும் இடங்களுக்கு வெறும் 14 நிமிடங்களில் செல்ல முடியும் என இந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த பறக்கும் டாக்ஸி பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றி செல்லவும் உதவியாக இருக்கும். இந்த பறக்கும் டாக்ஸியில் இன்னொரு கூடுதல் அமைப்பு இருக்கிறது. வர்ட்டிகள் டேக் ஆப் மற்றும் வர்ட்டிகள் லேண்டிங் வசதி இருக்கிறது. அதாவது இந்த பறக்கும் டாக்ஸி ஏரோப்ளேன் போன்று அல்லாமல் ஹெலிகாப்ட்டர் போல் செயல்படும். எனவே இதற்கு டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்வதற்கான ரன்வே தேவைபடாது. இந்த பறக்கும் டாக்ஸியில் பல அதிசயிக்க தக்க வசதிகள் இருக்கின்றது. எனவே, இந்த எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸிகள் வான்வழி போக்குவரத்து துறையில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கூடிய விரைவில், வானத்தில் நாம் ஏரோபிளேன், ஹெலிகாப்டர் மட்டுமல்லாமல் பறக்கும் டாக்ஸிகளையும் காணப் போகிறோம். மற்ற வளர்ந்த நாடுகளுக்கு நம்முடைய இந்த புதிய உருவாக்கம் நிச்சயம் பிரம்மிப்பை ஏற்படுத்து. ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும். எனவே, அனைவரும் பறக்கும் டாக்ஸியில் பயணிக்க தயாராக இருங்கள்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts