TamilSaaga

பாஜகவை எதிர்க்க இனி யாரும் இல்லை.. மோடி “Mass Leader”… யோகி அவருக்கும் மேல – ‘அந்தர்பல்டி’ அடித்த சவுக்கு ஷங்கர்.. குவியும் விமர்சனம்

அண்டை நாடான இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளின் தலையெழுத்தை இப்போதே யூகிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆம்! இந்தியாவின் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றிப் பெற்றது.

“சிங்கப்பூரில் உறவுக்கார பெண் குளிப்பதை பார்க்க Spy Cam” : பொதுஇடங்களிலும் இதே வேலை – தலையில் தட்டி தூக்கிய சிங்கை போலீஸ்

5 மாநில தேர்தல் என்பதால், ஒரு ‘மினி’ பொதுத் தேர்தலாகவே இது பார்க்கப்பட்டது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம், வறுமை, மாட்டுக்கறி விவகாரம், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான மனநிலை இருந்ததாகவும், இதனால் நிச்சயம் அங்கு பாஜக ஆட்சியை இழக்கும் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருந்தது.

ஆனால், உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 274 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து மிரள வைத்துள்ளார் யோகி ஆதித்யநாத். அவருக்கு இவ்வளவு எதிர்ப்புகள் இருக்கிறது என்று கூறியும், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது அரசியல் நோக்கர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. அதேபோல், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் மட்டும் விதிவிலக்காக ஆம் ஆத்மி முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, புது வரலாற்றை பதிவு செய்துள்ளது.

நடனமாடி Vote கேட்ட மாணவி.. கிரங்கிப் போன சிங்கப்பூர் சமூக வலைத்தளங்கள்.. குவிந்த ஓட்டுகள் – சாதித்து காட்டிய SAJC ஸ்டுடென்ட் “பிரியங்கா”

இந்நிலையில், இந்திய அரசையும், பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரையும் எப்போது மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்களின் ஒருவராக கருதப்படும் சவுக்கு சங்கர். துணிச்சலான இவரது விமர்சனங்களை பலரும் பாராட்டியுள்ளனர். தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டும் சவுக்கு சங்கர், முதல்வரின் மகனும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதியை விமர்சிக்க தயங்குவதில்லை. இவரது Neutral அரசியல் பாணி தான் ப்ளஸ் எனலாம்.

இந்த நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இவரை தமிழகத்தின் டாப் யூடியூப் சேனல்கள் சில பேட்டி கண்டன. அதில், இவர் பேசிய கருத்துக்கள் தான் இப்போது விவாதப் பொருளாகி உள்ளது. அதில் பேசிய சவுக்கு, “பாஜகவின் தேர்தல் வியூகத்தை, செயல்பாட்டை நான் தப்பு கணக்கு போட்டுவிட்டேன். சாதாரணமா நினைச்சுட்டேன். குறிப்பாக, உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மத அரசியல் எடுபடாது என்று நினைத்தேன். மக்கள் அவருக்கு சரியான பாடம் கொடுப்பார்கள் என்றே எதிர்பார்த்தேன். ஆனால், அவரை பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற வைத்துள்ளனர்.

நான் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. என்ன அரசியல் நடக்கிறது என்றும் புரியவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் என்ன அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்? ஆனால் ஒன்று… மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை விட, அதனால் வரும் துன்பங்களை விட, தங்கள் மதம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தங்கள் இந்து மதத்தை காக்க வந்த தேவ தூதர்களாக மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத்தை பார்க்கிறார்கள். அதனால் தான் பாஜகவால் மீண்டும் உ.பி.யில் வெற்றிப் பெற முடிந்திருக்கிறது. அங்கு கடந்த 40 வருடத்தில் எந்த கட்சியும் தொடர்ந்து இருமுறை ஆட்சியை பிடித்ததில்லை என்ற வரலாற்றை யோகி உடைத்து எறிந்திருக்கிறார். மற்றபடி நல்லாட்சி தந்ததாலோ, கொரோனாவை கட்டுப்படுத்தியதாலோ, நிர்வாகத் திறமையாலோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை. மத அரசியல் எனும் ஒரே காரணம் தான், மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க காரணம்.

இன்றைய நிலவரப்படி, பாஜகவை எதிர்க்கும் அளவுக்கு மத்தியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. மோடியை இன்னமும் மக்கள் நம்புகிறார்கள். வரும் 2024 தேர்தல் மட்டுமல்லாது, 2029 பொதுத் தேர்தலிலும் பாஜக தான் ஆட்சியமைக்கும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமின்றி, மோடியை விட வலிமையானவராக யோகி ஆதித்யநாத் உருவாகலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், மேற்கு வங்கத்தில் மூச்சு முன்னூறு தடவை மோடி பிரச்சாரம் செய்தும் பாஜகவால் அங்கு ஆட்சியமைக்க முடியவில்லை. ஆனால், இவ்வளவு எதிர்ப்பையும் மீறி, உ.பி.யில் சிங்கிளாக நின்று, அதுவும் “காவி” உடை அணிந்து கொண்டு மத அரசியல் செய்து ஜெயிக்கிறார் என்றால், எதிர்காலத்தில் RSS-க்கு மோடியை விட யோகி வலிமையானவராக தெரியலாம். எனினும், இன்றைய தேதிக்கு பாஜகவை அடிச்சுக்க இங்கு ஆளே இல்லை. Modi தான் இங்கு Mass Leader. அதை மறுக்க முடியாது” என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைகளுக்கு அனுமதி.. சிங்கப்பூரில் இருந்து இனி ஈஸியா இந்தியா போகலாம் – ஆனா டிக்கெட் கேன்சல் செய்தால் Refund கிடைக்குமா?

இந்நிலையில், சவுக்கு சங்கரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். சிலர் சவுக்கு ‘அந்தர்பல்டி’ அடித்துவிட்டார் என்றும், தேர்தலில் பாஜகவின் மெகா வெற்றியை பார்த்து பயந்துவிட்டார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். சிலர், அவர் வழக்கம் போல ‘Neutral’-ஆகவே யதார்த்தத்தையே பேசியுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

எது எப்படியோ… இந்தியாவில் பாஜக மிக வலிமையாக காலூன்றி உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை அவர்கள் ஆளும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதற்கு ஏற்றார் போலவே, ஆசிய நாடுகள் இந்தியாவுடன் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளும். நமது சிங்கப்பூர் எப்போதும் இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதால் எந்த சிக்கலும் இருக்காது என்பதே உண்மை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts