TamilSaaga

சிங்கப்பூரில் மகளை 17 முறை கத்தியால் குத்திய “கொடூர” நபர் : நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனை

சிங்கப்பூரில் தங்களது வீட்டை விற்றதற்காக தனது சொந்த மகளைக் கொல்ல எண்ணி ஒரு பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண்ணை பலமுறை கத்தியால் குத்திய நபருக்கு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) 15 ஆண்டுகள் நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டவரான 65 வயதான ஷூ ஆ சான், இந்த வார தொடக்கத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். மார்சிலிங்கில் தனது கணவருடன் வசிக்கும் 42 வயதுடைய தனது மூத்த பெண்ணை தான் அவர் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

மேலும் அவரை கொன்றவுடன் சிங்கப்பூரில் அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளவும் அவர் திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் தனது திட்டத்தை ஜனவரி 2020 வரை தாமதப்படுத்தியுள்ளார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் மார்சிலிங் லேன் வழியாக ஒரு பேருந்து நிறுத்தத்தை நோக்கி அந்த பெண்மணி நடந்து செல்வதைக் கண்ட அவர், அப்பெண்ணை நோக்கி ஓடி வந்து அந்த பெண்ணின் தோள்பட்டை, மார்பு மற்றும் முதுகில் பலமுறை சரமாரியாக குத்தியுள்ளார்.

அவர் முதலில் அப்பெண்மணியின் கழுத்தை குறிவைத்தார் என்றும் ஆனால் அதனை அப்பெண்மணி தடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் பல முறை கத்தியால் குத்திய பிறகு பின்னல் யாரோ வருகின்றனர் என்று நினைத்து அவ்விடத்தில் இருந்து ஓடிய அந்த ஆண், அவர் இறக்கவில்லை என்பதைக் கண்டதும் திரும்பி அவ்விடத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வழிப்போக்கன் தன் மகளைக் கவனித்துக் கொண்டு இருக்க, ஷூ மீண்டும் தனது மகளை பலமுறை குத்தியுள்ளார். அந்த பெண்ணின் வாயிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டதும் அவர் குத்துவதை நிறுத்தியுள்ளார்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவரது மூத்த மகனைத் தேடும் போது, ​​தீவு முழுவதும் தேடுதல் வேட்டையில் இருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது மகள் பல காயங்களுடன் ஜூன் 2021 வரை பிசியோதெரபி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

Related posts