TamilSaaga

“அது” இருந்தால் “அந்த” இடங்களில் முகக்கவசம் அவசியமில்லை – தளர்வு அளித்த பிரான்ஸ் அரசு

பிரான்ஸ் நாட்டில் தற்பொழுது கிருமி பரவளின் வேகம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. பிரான்சில் முக்கிய சில மாகாணங்களில் தொற்றின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கட்டாய சுகாதார அனுமதி உள்ள இடங்களில் முகக்கவசங்கள் கட்டாயமில்லை என்று தற்பொழுது பிரான்ஸ் அரசு கூறியுள்ளது குறிப்பித்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் அரசு வெளியிட்ட அரசாணையில் உணவகங்கள், திரையரங்குகள் பொழுதுபோக்கு இடங்கள் போன்ற இடங்களில் மக்கள் செல்வதற்கு “சுகாதார பாஸ்” கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனால் அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் அந்த இடங்களுக்கு செல்வதால் அங்கு உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்று பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தற்போது கூறியுள்ளார்.

இருப்பினும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் கட்டாய தடுப்பூசி நிலை அறிவிக்கப்பட்டது. அதனால் மக்கள் பலர் போராட்டங்களின் இறங்கியுள்ளனர்.

மேலும் தற்போது பிரான்ஸ் நாடு பல நிபந்தனைகளுடன் இந்தியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts