TamilSaaga

வொர்க் பர்மிட்டிலிருந்து S pass மாறுவதில் உள்ள சிக்கல்கள்: இந்த Approval letter இருந்தால் Easy – ஆக மாறலாம்!

சிங்கப்பூரில் பல வகையான work pass கள் உள்ளன. பணியின் தன்மை மற்றும் பணியாளர்களின் தகுதியை பொறுத்து எந்த வகை pass எடுக்கப்பட வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் கட்டுமானம், உற்பத்தி, கடல்சார் கப்பல் கட்டும் தளம், செயல்முறை அல்லது சேவைத் துறைகளில் பணிபுரிய வரும் semi skilled வெளிநாட்டு பணியாளர்கள் work permit pass இல் குறைந்த பட்ச சம்பளத்தில் பணிபுரிகிறார்கள்.

அதுவே S pass இல் பணிபுரியும் பணியாளர்கள் skilled qualification பெற்று மாதம் கட்டாயம் $3,150 சம்பளம் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

இரண்டு pass களையும் பணி வழங்கும் நிறுவனம் மூலமாகவே பணியாளர்கள் பெற முடியும என்றாலும் work permit pass ஐ விட S pass இல் பணியாளர்களுக்கு சில சலுகைகள் தரப்படுகின்றன. உதாரணமாக S pass வைத்திருக்கும் பணியாளர் தனது குடும்பத்தை சிங்கப்பூருக்கு அழைத்து வர இயலும். ஆனால் work permit pass வைத்திருப்பவர்களுக்கு அந்த சலுகை கிடையாது. இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக work permit பணியாளர்கள் S pass பெற விரும்புவர்.

சிங்கப்பூரில் work permit pass இல் பணிபுரியும் பணியாளர்கள் S pass க்கு எப்படி மாறலாம்?

முதலில் work permit pass லிருந்து s pass க்கு மாற விரும்பும் பணியாளர்கள், தங்களின் s pass பெறுவதற்கான தகுதியை சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் கல்வித்தகுதி, சம்பளம், மற்றும் பணி அனுபவம் அடங்கும்.

அனைத்து தகுதிகளும் இருப்பின், பணியாளர் தற்போது பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் நிறுவனர் மூலம் மட்டுமே S pass க்கு விண்ணப்பிக்க முடியும். பணியாளர் தானாக விண்ணப்பிக்க இயலாது.

பணி வழங்கும் நிறுவனர், MOM website இல் WP online Application tool வழியாக பணியாளரின் S pass விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் பணியாளரின் Agreement letter, passport copy, personal details, diploma certificates, marriage certificate மற்றும் Company latest business profile போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் நிறுவனர் S pass கட்டணமாக $105 செலுத்த வேண்டும்.

இதன்பிறகு அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கும் IPA letter (In- principle Approval ) வழங்கப்படும்.

பணி வழங்கும் நிறுவனர் இந்த IPA letter ஐ கண்டிப்பாக பணியாளரிடம் தர வேண்டும்.இந்த letter பணியாளர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்குகிறது.

ஏற்கனவே கட்டுமான துறையில் பணி புரியும் பணியாளர்களை எவ்வாறு பணிக்கு அமர்த்துவது?

கட்டுமான துறையில் இருக்கும் ஒரு நிறுவனம், ஏற்கனவே கட்டுமான துறையில் பணி புரியும் பணியாளர்களை தங்கள் நிறுவனத்திற்கு பணி அமர்த்திக் கொள்ளலாம்.

யார் தகுதியானவர்கள்?

ஏற்கனவே கட்டுமான துறையில் பணிபுரியும் non-traditional source (NTS), North Asian sources or People’s Republic of China (PRC) பணியாளர்கள்.

எப்போது Apply செய்யலாம்?

பணியாளரின் work permit valid ஆக இருக்கும் பட்சத்தில், தற்போதுள்ள நிறுவனத்தின் ஒப்பந்தத்துடன், இதற்காக WP Online வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பணியாளரின் work permit valid 20 நாட்களுக்குள் முடிவதாக இருந்தால், முதலில் pre Approval காக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பணியாளரின் தற்போதுள்ள நிறுவனத்தின் ஒப்புதல் கடிதம் வேண்டும்.

நிறுவனங்கள் ஏன் ஏற்கனவே பணிபுரியும் பணியாளர்களை பணி அமர்த்தவேண்டும்?

முன் அனுபவம் கொண்ட பணியாளர்களை பெறவும், பணியாளர்களை வேலைக்கு
அமர்த்தும் நேரத்தைக் குறைக்கவும், புதிய பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கான செலவைக் குறைக்கவும் நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றன.

ஏற்கனவே உள்ள நிறுவனத்தின் ஒப்புதலுடன் பணியாளரின் பணிமாற்றத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

பொதுவான work permit application வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே உள்ள நிறுவனருக்கு ஒரு SMS அல்லது Email அனுப்பப்படும். அவர் WP online இல் 7 நாட்களுக்குள், பணியாளரின் பணி மாறுதலை ஏற்க அல்லது நிராகரிக்க வேண்டும். தற்போதுள்ள வேலை நிறுவனம் ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், சமர்ப்பிக்கப்பட்ட work permit விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.

ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் work permit பெற வேண்டும்.

புதிய work permit வரும் வரை, பணியாளரின் work permit பழைய நிறுவனத்தில் valid ஆக இருக்கும்பட்சத்தில், அந்த பழைய நிறுவனமே பணியாளரின் வேலைக்கும், பராமரிப்பிற்கும், மற்றும் நிலுவை சம்பளத்திற்கும் பொறுப்புடையது.

புதிய work permit பெறுவது எப்படி?

ஏற்கனவே இருக்கும் work permit expire ஆகி இருந்தாலோ அல்லது cancel ஆகி இருந்தால் மட்டுமே புதிய work permit காக விண்ணப்பிக்க முடியும். இல்லையெனில் overstaying fine விதிக்கப்படும்.

பணிவழங்கும் நிறுவனர் WP online வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதனுடன் பணியாளரின் பூர்த்தி செய்யப்பட்ட application form, passport, security bond, full medical examination form ஆகியவற்றை upload செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த 5 நாட்களில், பணியாளரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு புதிய work permit வழங்கப்படும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts