TamilSaaga

சிங்கப்பூரில் பலருக்கு நல்ல வாழ்க்கை கொடுத்துள்ள JobStreet… ஏஜென்ட் இல்லாத நேரடி வேலை.. 10 நாட்களுக்குள் அழைப்பு – ஒன்றரை லட்சம் வரை சம்பளம்!

சிங்கப்பூரில் வேலைக்கு வர வேண்டும் என்றால், 90 சதவிகிதம் ஏஜெண்ட்ஸ் இல்லாமல் வர முடியாது என்ற சூழல் தான் உள்ளது. வெகு சிலர் மட்டுமே இந்தியாவில் தாங்கள் வேலை பார்க்கும் கம்பெனி மூலம், சிங்கப்பூர் வருகிறார்கள். இவர்களைத் தவிர, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நபர்கள் மட்டுமே ஆன்லைன் வெப்சைட்ஸ் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

அப்படி, நீங்களும் ஏஜெண்ட்களிடம் பணம் கொடுக்காமல் சிங்கப்பூரில் நல்ல வேலைக்கு வர வேண்டும் என்று விரும்பினால் இந்த செய்தி உங்களுக்கு தான்.

சிங்கப்பூரில் வேலை தேட கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டுகளில் ரெஜிஸ்டர் செய்யுங்கள்

வெப்சைட் பெயர்வெப்சைட் லிங்க்
JobsDB Singaporehttps://sg.jobsdb.com/
Monster Singaporehttps://www.monster.com.sg/
Indeed Singaporehttps://www.indeed.com.sg/
JobStreet Singaporehttps://www.jobstreet.com.sg/
LinkedIn Singaporehttps://www.linkedin.com/jobs/singapore-jobs/

இவை மட்டுமின்றி சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் மற்றும் வொர்க் பெர்மிட் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

என்னதான் நிறைய வெப்சைட்ஸ் இருந்தாலும், இவற்றில் job street தளத்தில் விண்ணப்பித்து அதிக ஊழியர்கள் வேலைக்காக சிங்கப்பூர் வந்திருக்கிறார்கள்.

ஆம்! job street தளத்தில் உங்களின் முழு தகவல்களையும் பதிவிடுங்கள். பின்னர் உங்களின் துறையில் இருக்கும் வேலைகள் குறித்து தேடுங்கள். ஒருநாளைக்கு குறைந்தது 10 கம்பெனிக்காகவது அப்ளை செய்யுங்கள்.

மேலும், உங்க Resume ஒரு பக்கத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். துறை சார்ந்த வேலை வேண்டாம் என நினைப்பவர்கள் பொதுவான வேலைக்கு கூட விண்ணப்பிக்கலாம். கம்பெனி தரப்பில் உங்களது ரெஸ்யூம் பரிசீலிக்கப்பட்டால், 10 நாட்களுக்குள் உங்களை தொடர்பு கொள்வார்கள். s passல் சிங்கப்பூர் செல்ல கண்டிப்பாக டிப்ளமோ அல்லது டிகிரியை முடித்திருக்க வேண்டியது கட்டாயம்.

இதில் கன்சல்டன்சிக்கு அப்ளை செய்வதை விட நேரடியாக கம்பெனிக்கு விண்ணப்பியுங்கள். இப்போ நீங்க வேலைக்கு தேர்வு செய்யப்பட்டா உடனே வேலைக்காக Offer லெட்டர் வாங்கிக் கொள்ளுங்கள். சிங்கப்பூரில் இருந்து IPA வரும். அது வந்தவுடன் டிக்கெட் போட்டுக்கொண்டு நேரடியாக வேலைக்கு வந்துவிடலாம். சம்பளமாக சிலர் 1.5 லட்சம் வரை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இங்கு வந்த பிறகு MOMக்கு நேரடியாக சென்று உங்கள் தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக $100 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகும். இதைத் தொடர்ந்து உங்களுக்கு spass கிடைத்து விடும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts