TamilSaaga

சிங்கப்பூர் “Work Permit” : போலி ஆவணம்.. முதலாளிக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் MOM வைத்த “ஆப்பு”

சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளருக்கான “பணி அனுமதி” விண்ணப்பத்தில் தவறான அறிவிப்பைச் செய்ததற்காக சிங்கப்பூரர் ஒருவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வயதோ 16 to 71.. மோசடி எண்ணிக்கையோ 495.. “எங்களுக்கே தண்ணிக்காட்ட பார்த்தாங்க” – சிங்கப்பூர் போலீசின் அதிரடி “வேட்டை”

34 வயதான ஹபிசுதீன் ஜாபர் என்ற அவர், 36 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை தனது வீட்டில் வீட்டுப் பணியாளராக பணி அமர்த்துவதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இரு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவருடைய வீட்டில் பணி செய்யும் எண்ணம் இல்லை என்று மனித வள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மாறாக சிங்கப்பூரில் இருந்து வேறு வேலை தேடுவதற்காக அவ்வாறு அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது

இந்த பணி அனுமதி விண்ணப்பம் கடந்த ஜனவரி 2018ல் செய்யப்பட்டது, என்று MOM கூறியது, ஹஃபிசுதீன் பின்னர் ஜனவரி 2019ல் அந்த அனுமதியைப் புதுப்பிக்க மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் வெற்றிகரமாக விண்ணப்பம் மற்றும் பணி அனுமதிச் சீட்டைப் புதுப்பித்ததற்கு ஈடாக, ஜனவரி 2018க்கும் பிப்ரவரி 2020க்கும் இடைப்பட்ட காலத்தில், ஹஃபிசுதீன் S$9,380-ஐப் பெற்றுள்ளார்.

மேலும் அந்த காலகட்டத்தில், ஹபிசுதீனுக்காக குறிப்பிட்ட அந்த வீட்டு பணிப்பெண் எந்த வேலையும் செய்யவில்லை அதேபோல அவருடைய வீட்டில் வசிக்கவும் இல்லை” என்று அமைச்சம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தற்போது அந்த ஃபிலிப்பைன்ஸ் பெண் தனது பணி அனுமதி விண்ணப்பத்தில் தவறான அறிவிப்பைக் கொடுத்ததற்காகக் கடுமையான எச்சரிப்புக்குப் பிறகு அவரது நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். மேலும் சிங்கப்பூரில் பணிபுரியவும் அவருக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை ஒருபுறம் இருக்க, வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கவும், அதை செல்லுபடியாக வைத்திருக்கவும் அந்தப் பெண்ணிடம் பணம் வசூலித்ததற்காக ஹஃபிசுதீனுக்கு S$50,750 அபராதமும் விதிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படும் என்று MOM அனுதினமும் தெரிவித்து வருகின்றது.

“சிங்கப்பூரில் மகனுக்கு Surprise கொடுக்க சென்ற தாய்” : “ஒருவரின்” அஜாக்கிரதையால் நேர்ந்த சோகம்

தவறு செய்யும் முதலாளிகளின் பணி அனுமதிச் சலுகைகள் இடைநிறுத்தப்பட்டு, பணி அனுமதி விண்ணப்பதாரர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார். கிக்பேக் வசூலிப்பவர்களுக்கு S$30,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts