TamilSaaga

“உன்ன நம்பி பின்னால உட்கார்ந்தது என் தப்பு” : சிங்கப்பூரில் பார்க்கிங்கில் “தில்லுமுல்லு” செய்த ஓட்டுநர் – இது தான் Instant Karma போல!

மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் நபர் ஒருவர், கார் பார்க்கிங்கில் இருந்து கட்டணம் செலுத்தாமல் செல்ல ஒரு வழியை கையாண்டுள்ளார். அதாவது பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியே வரும்போது ஒரு காரின் பின்னால் சென்றுவிடலாம் என்று எண்ணி, ஒரு கார்க்கு பின்னால் சென்றபோது பார்க்கிங் இடங்களில் பயன்படுத்தப்படும் தடுப்பு கருவி அந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தது போல விழுந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. அரசு முக்கிய அறிவிப்பு

உன்னையெல்லாம் நம்பி பின்னால உகந்தது தப்பாப்போச்சு என்று கூறும் அளவிற்கு வலி தாங்காமல் அந்த பின்னால் அமர்ந்திருந்த பெண் அந்த பைக்கை விட்டு இறங்கும் காட்சிகள் Sg Road Vigilante என்ற முகநூல் பதிவில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பதிவான இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த ஓட்டுநர் தனது செயலை நினைத்து வெட்கப்பட்டது தெரிந்தது. எப்படி இருந்தாலும் அவர் பார்க்கிங் கட்டணம் செலுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார் என்பது தான் உண்மை.

சிங்கப்பூரில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டது உண்மையா? : கடுப்பான சிங்கப்பூர் போலீஸ் – உண்மையில் நடந்தது என்ன?

HDB மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டணத்தை ஏய்ப்பதற்காக வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,400 நோட்டீஸ்களை வழங்கியுள்ளன. மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் கட்டண ஏய்ப்புக்காக முறையே S$25, S$50 மற்றும் S$80 அபராதம் விதிக்கப்படுகின்றன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts