சிங்கப்பூரில் 27 வயதான ஒரு கற்பழிப்பு குற்றவாளி, தண்டனை விதிக்கப்படவிருந்த நீதிமன்ற விசாரணைக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அதாவது நேற்று பிப்ரவரி 3 அதிகாலை பிளாக் 18D ஹாலண்ட் டிரைவ் பகுதியில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வோங் ஜுன் சியோங் என்ற அந்த நபர், குடிபோதையில் இருந் 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கடந்த 2021ம் ஆண்டு தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிடப்பட்ட விசாரணைக்கு வோங் ஜுன் சியோங் ஆஜராகத் தவறியபோது, அவருக்கு $80,000 செலவில் ஜாமீன் வழங்கிய அவரது தந்தை, தன்னால் தனது மகன் எங்கு இருக்கின்றாரா என்பது தெரியவில்லை என்றும் மேலும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் காலை 8.30 மணியளவில் எழுந்தபோது தனது மகனை வீட்டில் காணவில்லை என்றும் தனது மகனின் தொலைபேசி இணைப்பு “துண்டிக்கப்பட்டுள்ளது” என்றும் வோங்கின் தந்தை கூறினார்.
மேலும் வோங்கின் வழக்கறிஞர் கிரிகோரி ஃபாங், தனது கட்சிக்காரர் அதிகாலை 3 மணியளவில் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்பதற்கான எந்த அறிகுறியும் அப்போது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பிப்ரவரி 3ம் தேதி காலை 6:55 மணிக்கு 18D ஹாலண்ட் டிரைவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எச்சரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அந்த இடத்தில் 27 வயது ஆடவர் அசையாமல் இருப்பதைக் கண்டனர், பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவரால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவருடைய இந்த இறப்பில் சதேகத்திற்குரிய எந்தவிதமான விஷயமும் இல்லை என்று போலீசார் கூறினார். கடந்த ஆண்டு குடிபோதையில் இருந்த 18 வயது பெண்ணை கிளார்க் குவேயில் அணுகி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வோங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மார்ச் 2019ல், பாதிக்கப்பட்ட பெண், அவரது காதலன் மற்றும் அவர்களது சகாக்கள் கிளார்க் குவேயில் உள்ள எஃப் கிளப்பிற்குச் சென்றிருந்தனர். அந்த நண்பர்கள் மற்றும் அந்த காதலன் அந்த பெண்ணை தனியே விட்டு சென்ற நிலையில் வோங் அந்த பெண்ணை தன்னுடன் அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.