TamilSaaga

“கவலை வேண்டாம்.. ஆனால் கவனம் வேண்டும்” : சிங்கப்பூரில் வலுப்பெறும் Digital Banking – MAS தரும் மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் டிஜிட்டல் பேங்கிங்கின் பாதுகாப்பை வலுப்படுத்த கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகளை சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் “கணிசமான அளவில் செயல்படுத்தியுள்ளன” என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து SMS மோசடிகளைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளை வலுப்படுத்த பல உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.

“பெருந்தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்தும் வலுவான நிலையில் சிங்கப்பூர்” : வல்லுநர்கள் அறிவிப்பு – ஆனால் NO சொல்லும் WHO

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் SMSகள் அல்லது மின்னஞ்சல்களில் உள்ள கிளிக் செய்யக்கூடிய இணைப்புகளை அகற்றுதல், நிதி பரிமாற்ற பரிவர்த்தனை அறிவிப்புகளுக்கு S$100 அல்லது அதற்கும் குறைவான இயல்புநிலை வரம்பை அமைத்தல் மற்றும் மொபைல் சாதனத்தில் புதிய சாஃப்ட் டோக்கனைச் செயல்படுத்துவதற்கு குறைந்தது 12 மணிநேரம் தாமதப்படுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

வரும் மாதங்களில் செயல்படுத்தப்படும் நீண்ட கால நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய MAS தொழில்துறையுடன் இணைந்து தற்போது செயலாற்றி வருகின்றது. மோசடிகளால் ஏற்படும் இழப்புகளை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பையும் இது உருவாக்கி வருகிறது. MAS-ன் தலைமையில் உள்ள Payments கவுன்சில், மோசடிகளால் ஏற்படும் இழப்புகள் நுகர்வோர் மற்றும் நிதி நிறுவனங்களிடையே எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் ஒரு கட்டமைப்பில் கடந்த ஜூலை 2021 முதல் செயல்பட்டு வருகிறது.

அனைத்து தரப்பினருக்கும் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்புகள் உள்ளது மற்றும் மோசடிகளுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமும் உள்ளத்து” என்று MAS இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வாடிக்கையாளர் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான “வலுவான கட்டுப்பாடுகள்” மற்றும் “சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து பதிலளிப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகள்” போன்ற தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, நிதி நிறுவனங்களுக்கு உள்ளது என்றும் வங்கிக் கட்டுப்பாட்டாளர் கூறினார்.

சிங்கப்பூரின் “சோவா சூ காங்” Dormitory நிலைமை படுமோசம்.. ரணவேதனை அனுபவிக்கும் வெளிநாட்டு ஊழியர் – பாடுபடுத்தும் கோவிட்

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட அல்லது வங்கிச் தொடர்பான தரவுகளை யாருக்கும் வழங்காமல், வங்கி அனுப்பியதாகக் கூறும் SMS அல்லது மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யாமல், வங்கியின் அதிகாரி மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்வதன் மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்றும் MAS அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts