TamilSaaga

வேலைக்குச் சென்ற பெண்ணிடம்… ரயிலில் தனது “அந்தரங்க” உறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியர் – “சுளுக்கெடுத்த” Jurong East MRT Station ஸ்டேஷன் மாஸ்டர்

சிங்கப்பூரின் Raffles Place ரயில்வே ஸ்டேஷனில் இருந்து Jurong East MRT Stationக்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில் ஏறினார். காலை 7.40 மணிக்கு அந்த ரயில் Raffles Place-ல் இருந்து கிளம்பியது.

அதே ரயிலில் மகேஸ்வரன் என்பவரும் அப்போது ஏறினார். அப்பெண், இருக்கையின் வலது பக்க மூலையில், அதாவது glass panel அருகில் உட்கார, மகேஸ்வரன் அப்பெண்ணின் இடதுபுறத்தில் அமர்ந்தார்.

கூட்டம் அதிகம் இல்லாத அந்த நேரத்தில், அப்பெண் தனியாக இருந்ததால், மகேஸ்வரனுக்கு பாலியல் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. உடனே வேலையைக் காட்ட தொடங்கியிருக்கிறார். முதலில் அப்பெண்ணின் இடுப்பை லேசாக தொடர், அவரோ இது எதேச்சையாக ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்துவிட்டார். பின்னர், மீண்டும் மகேஸ்வரன் முழங்கையால் தனது அக்குளுக்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியை தொடுவதை உணர்ந்துள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு மாதம் “9 லட்சம்” வரை சம்பளம்.. இளைஞர்கள் குறிவைக்கும் வேலை – வியக்க வைக்கும் Forbes அறிக்கை

பிறகு, மகேஸ்வரன் அப்பெண்ணிடம் தனது மொபைலைக் காட்டி, ரயிலில் தூங்கியதால் தான் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிட்டதாக கூறியுள்ளார். அப்போது மீண்டும் மகேஸ்வரனின் முழங்கை தனது மேல் படுவதை அப்பெண் உணர்ந்தார்.

பிறகு, Jurong East MRT Station-க்கு முன்பு இன்னும் எத்தனை ரயில் நிலையங்கள் உள்ளன என்று மகேஸ்வரன் அப்பெண்ணிடம் கேட்க, ‘மேலும் ஏழு நிலையங்கள் இருப்பதாக கூறிவிட்டு’ அப்பெண் எழுந்து அடுத்த பெட்டிக்கு சென்றுவிட்டார்.

ஆனால் மகேஸ்வரன் மீண்டும் அப்பெண்ணை பின்தொடர்ந்து சென்று அருகில் அமர்ந்து, ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்கு எத்தனை நிறுத்தங்கள் உள்ளன என்று மீண்டும் கேட்டிருக்கிறார்.

எழுந்து நின்று grab pole நோக்கி நடப்பதற்கு முன், ‘இன்னும் நான்கைந்து நிறுத்தங்கள் இருக்கிறது’ என்று அப்பெண் சொல்லியிருக்கிறார். உடனே, மகேஸ்வரன் தனது அந்தரங்க உறுப்புகளை அவளிடம் காட்டி, பாலியல் சைகை செய்துள்ளார்.

இதனால் பதறிய அப்பெண், அங்கிருந்து சென்று ரயில் கதவுகள் முன் நின்றார். மகேஸ்வரன் அவரைப்பின்தொடர்ந்து, ஒரு கண்ணாடிப் பலகையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு மீண்டும் தனது அந்தரங்க உறுப்பை அப்பெண்ணிடம் காட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, ரயில் Jurong East ஸ்டேஷனுக்கு வந்துவிட்டது. இருவரும் அந்த ஸ்டேஷனில் இறங்க, அப்பெண் விறுவிறுவென நடந்து கீழே இறங்கும் escalator-ஐ அடைந்தார். மகேஸ்வரன் அப்பெண்ணுக்கு இரண்டு படிகள் முன் சென்று நின்று கொண்டு, escalator நகர்கையில் அப்பெண்ணை நோக்கி திரும்பி மறுபடியும் அந்தரங்க உறுப்பை காட்டினார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர்.. “முடிவெட்ட போனதுக்கு 1,771 வெள்ளி பில் போட்டாங்க” : கடுப்பான நபர் – ஆனா கடைக்காரர் கொடுத்த நெத்தியடி பதில்

இனி பொறுத்தது போதும் என்று அந்த பெண் கூச்சலிட, Jurong East ஸ்டேஷனின் மாஸ்டர் விரைந்து வந்துவிட்டார். அப்பெண், மகேஸ்வரன் அடித்த கூத்தை கூச்சலிட்டு கத்த, அவர் அங்கிருந்த தப்பியோட முயற்சித்தார். விரைந்து செயல்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர், மகேஸ்வரனின் சட்டையைப் பிடித்து இழுக்க, அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. உடும்புப் பிடி போல் இருந்த அந்த பிடியில் மகேஸ்வரன் தப்பியோட முடியாமல் சிக்க, போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட, மகேஸ்வரன் அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார். மகேஸ்வரனை பிடித்துக் கொண்டே ஸ்டேஷன் மாஸ்டர் போலீசுக்கு கால் செய்து அழைத்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மகேஸ்வரனின் முழு பெயர் Makesvaran Visuranatham என்று தெரிய வந்தது. இவர் மலேசியாவைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்திருக்கிறார். வயதோ 37 தான்.

நீதிமன்றம், மகேஸ்வரனுக்கு ஐந்து முதல் ஆறு வாரங்கள் வரை சிறை மற்றும் S$500 முதல் S$1,000 வரை அபராதம் விதித்தது. அவருக்கு அடுத்த மாதம் இந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

வேலைக்கு வந்த இடத்தில், அசட்டுத் தைரியத்தில், ஓடும் ரயிலில் இப்படி அந்தரங்க உறுப்பையே ஒரு பெண்ணிடம் காட்டும் அளவுக்கு சென்ற மகேஸ்வரன் இப்போது தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, அவர் வேலைப்பார்த்த அலுவலகம், குடும்பம் என்று அனைவருக்கும் அவரது அருவருக்கத்தக்க செயல் தெரியவர, இனி அவர் காலம் முழுக்க கூனிக்குறுகி இருக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts