TamilSaaga

இதயம் இனிக்கும் இனிப்பு வகைகள் – சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய WIMBY

சிங்கப்பூரில் பல தொண்டு நிறுவனங்களும் தன்னார்வ நிறுவனங்கள் சிங்கப்பூர் சமுதாயத்தையும் சிங்கப்பூரில் குடிபெயர்ந்த ஊழியர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறந்த மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட திட்டம் தான் Birthday Makan.

Welcome In My Backyard (WIMBY) எனும் தொண்டு ஊழிய இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் அந்த நிறுவனம் ஆறு கடைகளைத் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளருடன் இணைந்து, வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனிப்பு வகைகளை தயாரித்து கொடுத்தன.

இந்நிலையில் அந்த 6 கடைகளில் ஏதாவது ஒரு கடையில், பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் வரை 2 வெள்ளியில் இருந்து 5 வெள்ளி வரை செலுத்தலாம். அப்படி செலுத்தும் பணத்தைக் கொண்டு 1500 இனிப்புகளை தயாரிக்க திட்டமிட்டு இருந்தது அந்த நிறுவனம்.

ஆனால் 2400 வகை இனிப்புகளை தயாரிக்க நிதி சேர்ந்தது, தற்போது அந்த நிதியை கொண்டு பெருந்தொற்று சூழ்நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இடங்களை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நேரில் சென்று இனிப்பு வகைகளை வழங்கியதுடன், பொதுமக்கள் அவர்களுக்காக எழுதிய கடிதங்களும் அவர்களிடம் கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related posts