TamilSaaga

“சிங்கப்பூர் to இந்தோனேசியா” : நீங்க ஆவலோடு எதிர்பார்த்த படகு பயணம் ரெடி – ஆனா ஒரு சிக்கல் இருக்கு

சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் பாடாம் இடையே ஓய்வுநேர Ferry பயணம் விரைவில் Ferry ஆபரேட்டர் BatamFast மூலம் சாத்தியமாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதை இந்தோனேசிய ஆன்லைன் செய்தி தளமான டெம்போவும் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. BatamFastன் இணையதளத் தகவலின்படி, வரும் பிப்ரவரி 18ம் முதல் தினமும் தனா மேரா படகு முனையத்தில் இருந்து ஒரு படகுப் புறப்பட்டு, நோங்சாபுரா படகு முனையத்தை வந்தடையும் என்று கூறியுள்ளது.

நடிகை ஊர்வசி குடும்பத்தில் 2 தற்கொலை – 5 நாட்களாக இரு தனித்தனி அறையில் தொங்கிய சடலங்கள்.. சிக்கிய “கடிதம்”

இருப்பினும், இந்த தினசரி படகுப் பயணத்தின் விவரங்கள், நேரம் மற்றும் டிக்கெட் விலை ஆகிய தகவல்கள் இந்த இரண்டும் இணையதளத்தில் இன்னும் கிடைக்கவில்லை. Shin Min செய்தி நிறுவனம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, BatamFastன் பாசேஜ் ஆபரேஷன்ஸ் மேலாளர் Chua Chun Long, “சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் Batam இடையே தினசரி படகுப் பயணத்தை ஆபரேட்டர் வழங்குவதாக உறுதிப்படுத்தினார்”.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து BatamFast சரியாக ஒரு நாளுக்கு முன்பு தான் அனுமதியை பெற்றதாக சுவா மேலும் கூறினார், ஒரு வாரத்திற்குள் இருமார்கமாக 14 பயணங்களை இயக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார். அதே நேரத்தில் இந்த வழித்தடத்தில் மற்ற இரண்டு படகு ஆபரேட்டர்களான சிண்டோ ஃபெரிஸ் மற்றும் பிண்டன் ரிசார்ட் ஃபெரிஸ் ஆகியவை முறையே படாம் மற்றும் பிந்தனுக்கு படகு பயணங்களைத் தொடங்கும் திட்டம் இல்லை என்று ஷின் மின் குறிப்பிட்டார். சிங்கப்பூர் மற்றும் Batam மற்றும் பிந்தன் இடையேயான Travel Bubble கடந்த ஜனவரி 24 அன்று திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது தொடங்கும் தேதி குறித்து எதுவும் தற்போது வரை குறிப்பிடப்படவில்லை.

“எப்போது சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்” : டெல்டாவை மிஞ்சியதா? Omicron – அமைச்சர் ஓங் விளக்கம்

பிப்ரவரி 14, 2022 நிலவரப்படி சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) ஏற்பாடு சிங்கப்பூரில் இல்லை. இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் பயணிகள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் அறிவிப்பை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தோனேசிய கோவிட்-19 பணிக்குழு முன்பு விநியோகித்த ஒரு சுற்றறிக்கையின்படி, படாம் மற்றும் பிந்தனுக்குள் நுழைபவர்கள் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts