TamilSaaga

சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது “வரம்” : லாரிகளுக்கு மாற்றாகும் மினிபஸ் – Aespada சொல்வதென்ன

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஒரு Start-Upநிறுவனம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல மினிபஸ்களை முன்பதிவு செய்வதற்கான தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்ய லாரிகளுக்கு மாற்றாக இது புதிய வழியை வழங்குகின்றது. இங்குள்ள பல நிறுவனங்கள் இன்னும் தொழிலாளர்களைக் கொண்டு செல்லப் லாரிகளை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள், போக்குவரத்து வழிமுறையின் பாதுகாப்பு பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புக்கிங் தொடங்கியது – சிங்கப்பூர் – திருச்சி

ஆனால் உள்ளூர் நிறுவனங்கள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), தொழிலாளர்களுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு தடைசெய்யப்பட்டுள்ளது என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. இந்நிலையில் Aespada நிறுவனர் திரு Jean Christophe Li, இந்த செயலியின் மினிபஸ் சேவையானது அத்தகைய (SME) நிறுவனங்களின் கவலையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து திரு லி பேசும்போது : “விலங்குகளை போல லாரிகளில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு இது பல ஆண்டுகளாக இருந்துவரும் பிரச்சனை”. குறிப்பாக, சமீபத்திய வாரங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது, தொழிலாளர்கள் குப்பைப் பைகளுக்குள் தங்களை மறைத்துக்கொள்ள முயற்சிப்பதை நீங்கள் கண்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. “ஆகையால் நாங்கள் வழங்குவது, தங்கள் தொழிலாளர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார் அவர்.

டஜன் கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் சுமார் 45 பயணிகளை உட்கார வைத்து அழைத்து செல்லும் வாகனங்களை வாடகைக்கு எடுக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு முறையும் ஒரு டஜன் அல்லது குறைவான தொழிலாளர்களுடன் தற்காலிக பயணங்களை மேற்கொள்ளும் பல ஒப்பந்ததாரர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்களுக்கு இது நடைமுறைக்கு மாறானது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Aespada செயலி, ஆரம்பத்தில் நிறுவனங்களை லாரிகள் மற்றும் லாரி கிரேன்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் நெட்வொர்க்குடன் இணைத்தது.

இந்த மாதம், அதன் பிளாட்ஃபார்மில் மினிபஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சேர்த்தது, அதில் நிறுவனங்கள் “24/7 நேரமும் தற்காலிகமாக அல்லது தங்கள் தொழிலாளர்களை சிங்கப்பூரைச் சுற்றிக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தை முன்பதிவு செய்ய முடியும்” என்று திரு லி கூறினார். பேருந்துகள் ஏழு, ஒன்பது அல்லது 13 பணியாளர்களை ஏற்றிச் செல்லலாம் மற்றும் ஒவ்வொரு பயணமும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 55 முதல் 65 வெள்ளி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts