TamilSaaga

வியட்நாம் கலாச்சார ஆடையின் “மேலாடையை” மட்டும் அணிந்த மாடல் – Fashion என்று “கீழாடை” அணியாததால் கொதித்துப்போன சிங்கப்பூர் வியட்நாம் மக்கள்

மாடல் அழகியும் Influencerமான Siew Pui Yi என்றும் அழைக்கப்படும் செல்வி புய்யி, வியட்நாம் நாட்டின் கலாச்சார ஆடையாக கருதப்படும் Ao Dai என்ற ஆடையை கால்ச்சட்டை இல்லாமல் அணிந்து எடுத்த போட்டோஷூட்டுக்கு எதிராக வியட்நாம் மக்கள் தற்போது கொதித்தெழுந்துள்ளனர். தங்களுடைய கலாச்சாரத்தை அவர் சீர்கெடுத்துள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

வியட்நாம் நகரங்களில் ஒன்றான Hoi An என்ற நகரில் தான் 23 வயதான அந்த மலேசிய மடலின் glamour போட்டோஷூட் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Ao Dai என்ற அந்த ஆடையை பொதுவாக வியட்நாம் பெண்கள் நீளமான காலசட்டையோடு அணிவது தான் வழக்கம் என்றும் கூறப்படுகிறது. ‘

இந்நிலையில் தன்னுடைய செயல் வியட்நாம் நாட்டில் உள்ள வியட்நாம் மக்கள் மட்டுமில்லாமல் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள வியட்நாம் மக்களின் உணர்வுகளையும் பாதித்துள்ள நிலையில் Siew தற்போது பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்ற அந்த மாடல் அழகி அங்குள்ள Hoi An நகரில் இந்த போட்டோஷூட்டை எடுத்துள்ளார்.

Boon Lay பகுதியில் திருமணச்சடங்கில் நடந்த இரக்கமற்ற தாக்குதல்.. “திருச்செல்வம்” உள்பட இரு இளைஞர்கள் கைது – தாக்குதலில் ஈடுபட்டவர் தமிழரா? சிங்கப்பூர் வாழ் தமிழரா?

கடந்த ஏப்ரல் 4ம் தேதி Ao Dai ஆடையில் கால்ச்சட்டை அணியாமல் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட அது அங்கு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இணையத்தில் வியட்நாம் மக்கள் தங்கள் கலாச்சாரம் சீரழிக்கப்படுவதாக கூறிய நிலையில் ஏப்ரல் 6ம் தேதி Siew தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

வியட்நாம், சீனா மற்றும் ஆங்கிலத்தில் தனது மன்னிப்பை முகநூல் வழியாக அந்த மலேசிய மடல் அழகி தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் பிறந்த Siew கடந்த 2019ம் ஆண்டு தனது லேப்டாப்பில் பிரச்சனை ஏற்பட அதை ஒரு சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்ய கொடுத்துள்ளார். அப்போது அதில் இருந்த அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் திருடப்பட்டு இணையத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

St John’s தீவு.. வெட்டவெளியில் உள்ளாடைகளை கூச்சமின்றி மாற்றிய இளம் பெண்கள் – சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த “தமிழ் குடும்பம்” – வெளியான Video

அதை கண்டு மனம் நொந்துபோன அவர், அதையே மூலதமாக கொண்டு அன்று முதல் மிகக்கவர்ச்சியான Influencerஆக செயல்பட்டு வருகின்றார். Marketing துறையில் தங்கள் அழகை கொண்டு பொருட்களை மார்க்கெட்டிங் செய்யும் பணியை அவர் செய்து வருகின்றார். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 17.3 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts