TamilSaaga

சிங்கப்பூரில் பாம்புபிடிக்க சென்ற வாலிபர் : “வேறொருவர் அலட்சியத்தால் வாலிபரை கொத்திய பாம்பு” – பொதுமக்களுக்கு அவர் தந்த விழிப்புணர்வு!

உலக அளவில் அதன் உருவத்தால் அடிக்கடி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட விலங்குகளில் பாம்புகளும் ஒன்று. அதை நாம் துன்புறுத்தாதவரை நம்மை அது துன்புறுத்தாது என்பார்கள். இந்நிலையில் சிங்கப்பூரில் பாம்புகளை பற்றியும் ஊர்வன பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த ஒருவருக்கு இறுதியில் அது அவர் வருத்தப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. டேரில் சான் என்ற அந்த நபர், வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், மார்ச் 16 அன்று பொறுப்பற்று செயல்பட்ட மனிதர் ஒருவரால் தாக்கப்பட்ட Wolf வகை பாம்பு ஒன்று தன்னை தாக்கியதோடு அதற்கும் அந்த மனிதரால் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறி வேதனையடைந்துள்ளார்.

சிங்கப்பூரில் 9 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்… தவறே செய்திருந்தாலும் எட்டி உதைப்பது நியாயமா? – சிக்கலில் SDA அதிகாரிகள்

வனவிலங்கு மீட்புத் தொண்டு நிறுவனமான அனிமல் கன்சர்ன்ஸ் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன் சொசைட்டியின் (ACRES) தன்னார்வலரான சான், ஒரு வளாகத்தில் இருந்த Wolf வகை பாம்பை மீட்க முயன்றதைத் தொடர்ந்து அதனால் கடிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த பாம்பின் மீது கோபமில்லை காரணம் அதன் கடி ஒரு எறும்பின் கடியை விட வலி குறைவானதாகவே இருந்தது. மேலும் அந்த பாம்பு சானை கடிக்க காரணம் ஏற்கனவே ஒரு நபர் தடியால் அதை தாக்கியது தான். இறுதியில் சான் அதை காப்பாற்ற சென்றும் அந்த பாம்பு அதன் தற்காப்புக்காக சானை தாக்கியுள்ளது.

Daryle Chan’s Post

பாம்பை தாக்கிய அந்த நபர் சான் குழுவின் அறிவுரைக்கு செவிசாய்க்காமல் பாம்பைத் தாக்கியதால் அது கோபமடைந்து தற்காத்துக்கொண்டது என்றார் சான். ஒரு பாம்பை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தயவு செய்து அதை விட்டுவிடுங்கள். பாம்பை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார் ஆவர்.

சிங்கப்பூரில் 4 ஆண்டுகள் நான் ஏறாத கம்பெனி இல்ல.. ஆனால் இன்று, எனக்கு தடையேதும் இல்ல – “சொல்லியடித்து சாதித்த பெண்”

யாராலும் தாக்கப்படாமல் இருந்திருந்தால் அது என்னை தாக்கியிருக்காது, ஆகவே மக்கள் பாம்புகளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் முறையான நபர்களை கொண்டு அந்த பாம்பினை கையாளவேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts