உலகம் முழுவதும் பரவி வரும் இந்த பெருந்தொற்று பல வணிகங்களை சீரழித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலிலும் நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சாங்கி விமான நிலையம் மீண்டு வருவதற்கான பல அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது என்றே கூறலாம். கடந்த ஆண்டு அமெரிக்க பத்திரிகை நிறுவனமான “நியூஸ்வீக்” நடத்திய முதல் “Future of Travel” விருதுகளின் சர்வதேச விமானப் பிரிவில் SIA கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி அன்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
அதே போல் அந்த மகுடத்தில் மீண்டும் ஒரு மாணிக்கமாக Conde Nast Traveler India என்ற இதழ் நடத்தும் Readers Travel விருதுகளின் கடந்த 2021ம் ஆண்டு விருதை நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வென்றுள்ளது. Conde Nast Traveler என்ற இதழ் லண்டனை மையமாக கொண்டு பல நாடுகளில் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த இதழின் Readers Travel Awards 2021 நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
Condé Nast Traveler India 2021 விருது பட்டியலை காண…
ஒவ்வொரு ஆண்டும், Conde Nast Traveler India என்ற இதழ் நடத்தும் Readers Travel விருதுகள் சிறந்த விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், மற்றும் 20க்கும் அதிகமான வகைகளில் உள்ள பிற பயண நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளை கௌரவிக்கின்றன. இவை இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான விருதுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விருதுகள் தனது 11வது ஆண்டில் உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.
மேலும் இந்த விருதுக்கான வெற்றியாளர்களை தேர்வு செய்ய நடுவர் குழுவோ அல்லது வேறு குழுவோ கிடையாது. Condé Nast Traveler Indiaன் வாசகர்களிடம் ஆன்லைன் சர்வே மூலம், பல்வேறு வகைகளில் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிக்கின்றனர். லண்டனை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன டேபுலேஷன் ஏஜென்சியால் தரவு தணிக்கை செய்யப்படுகிறது. பின்னர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர். ரீடர்ஸ் டிராவல் விருதுகள் 2021ன் வெற்றியாளர்கள் நவம்பர்-டிசம்பர்-ஜனவரி இதழான கான்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் அவர்களது இணையதளமான www.cntraveller.inல் அறிவிக்கப்படுகிறது.
இந்த போட்டியில் சிறந்த விமான நிலையமாக Changi தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துபாய் விமான நிலையம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதே போல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் Emirates இரண்டாம் இடம் பிடித்துள்ளது.