TamilSaaga

“உலகம் முழுதும் காதல் வலை வீசி மோசடி” : மலேசியாவைச் சேர்ந்த நைஜீரியர்கள் சிங்கப்பூரில் கைது – சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் மலேசியாவைச் சேர்ந்த “நாடு கடந்த” காதல் மோசடி கும்பல் உறுப்பினர்களாக இருந்த இரண்டு நைஜீரிய பிரஜைகளுக்கு சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Awolola Oladayo Opeyemi என்ற 37 வயது நபருக்கு 60 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் Awolola Gbolahan Ayobami என்ற 40 வயது நபருக்கு 50 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “Mass”-அக பதில் கொடுத்து அசத்திய சிங்கப்பூர் நடிகை Cynthia Koh

இருவருமே மலேசியாவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. கிரிமினல் குற்றம் மூலம் வருமானத்தைப் பெற சதி செய்தல் மற்றும் நீதியின் போக்கைத் தடுப்பது உட்பட நான்கு குற்றச்சாட்டுகளை ஓபியேமி ஒப்புக்கொண்டார். மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
.
கைதாகி தண்டனை பெற்ற இரண்டு பேரும் மலேசியாவைச் சேர்ந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் இணையக் காதல் மோசடிகளில் ஈடுபட்டு இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் என்றும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஓபியேமியும், அயோபாமியும், ஃபோலா என்று அறியப்படும் ஒரு மோசடி செய்பவருடன் பணியாற்றியுள்ளனர். ஃபோலா பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவார், அதே சமயம் ஓபியேமியும் அயோபாமியும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நிதியைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் தான் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓபியேமி மற்றும் அயோபாமி சிங்கப்பூர் பெண்களுடன் உறவு கொண்டார்கள். இதனால் சிங்கப்பூரில் ஒரு பெண் கருவுற்றுள்ளர் என்று நீதிமன்றம் கூறியது. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை வாங்க பயன்படுத்தியுள்ளனர். இந்த பெண்கள் மலேசியாவில் உள்ள ஓபியேமி மற்றும் அயோபாமி ஆகியோருக்கு, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணத்தைச் சேகரித்த பிறகு அளிப்பார்கள். அல்லது சிங்கப்பூரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, மலேசியாவில் உள்ள இருவருக்குப் பணத்தை அனுபவர்கள்.

இந்நிலையில் அவர்கள் மேலும் பல பெண்களை சிங்கப்பூரில் தங்கள் வசம் மாற்ற நினைத்தபோது தான் அவர்கள் போலீசாரிடம் சிக்கினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts