சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில் தடுப்பூசியினை செலுத்திக்கொண்ட மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்ட சுகாதார நிலைய அலுவலகங்களுக்கு சென்று முழுமையாக தடுப்பூசி செலுத்தியதை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு வருபவர்கள் குடிமக்கள் உட்பட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சரிபார்ப்பிற்கு அளிக்க வேண்டும் என தொழில்நுட்பத் துறை மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் ஆதாம் பாபா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இதனை அறிவிக்கும் மக்களுக்கு மலேசியாவின் அவசரகால தயாரிப்பு மற்றும் புதிய நடவடிக்கை நிலையமானது மலேசியாவின் சான்றிதழை அவர்களுக்கு வழங்கும்.
இதுமட்டுமல்லாமல் மைசெஜாதெரா என்ற செயலின் மூலமாகவும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது மலேசியர்களுக்கானது மட்டுமல்லாமல் அனைத்து நாட்டவர்க்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.