TamilSaaga

90 நாட்கள் வரை கெட்டுப் போகாத “ஆவின் பால்”.. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி.. அசர வைக்கும் “Tetra Packet” தொழில்நுட்பம் – வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் பால்வளத் துறையின்கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தினம் 41 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இதில், 28 லட்சம் லிட்டர் பால் மக்களின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பால், ஆவின் பால் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகிறது.

அதேசமயம், ஆவின் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், ஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்கப்பட்டு வந்ததே தவிர, இதுவரை பால் ஏற்றுமதி செய்யப்பட்டதில்லை.

இந்நிலையில், முதன் முதலாக பாலை நேரடியாக வெளிநாடுகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, நவீன முறையில் பாக்கெட் செய்யப்பட்ட ஆவின் பால், சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

சிங்கப்பூரில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தமிழ் ஊழியர் கைது – உயிரின் விலை தெரியாமல் excavator இயந்திரத்தில் விளையாட்டு – ஒரு உயிர் போச்சு!

இதற்காக உயர் வெப்ப நிலையில் பாலை பதப்படுத்தி அட்டைப்பெட்டி பாக்கெட்களில் அடைக்கப்படுகிறது. சிங்கப்பூர் ஏற்றுமதிக்காக திருவண்ணாமலை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பாக்கெட் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பால் ஒரு வாரம்வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது ஹைலைட். இந்த புதிய ஸ்கீம் படி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், சிங்கப்பூரை தொடர்ந்து பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இதர நாடுகளுக்கும் நேரடியாக பாலை ஏற்றுமதி செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படி ஒரு வாரம் வரை பால் கெட்டுப் போகாமல் இருக்கிறது?

செய்தியின் படி, இந்த நவீன பாக்கெட்டுகளில் ஆவின் பால் கெட்டுப் போகாமல் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் 90 நாட்கள் வரை ஆவின் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் உள்ளது. அதை ஆவின் நிறுவனம் பயன்படுத்தியும் வருகிறது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை 139 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் முதலில் கொதிக்க வைக்கப்படுகிறது.

இதன் மூலம் அந்த பால் Zero Bacteria Milk என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த செயல்முறைக்குப் பிறகு, பதப்படுத்தப்பட்ட பால் 200 மில்லி, 500 மில்லி மற்றும் ஒரு லிட்டர் டெட்ரா பேக்களில் (Tetra Packs) பேக் செய்யப்படும். பதப்படுத்தப்பட்ட பால் 90 நாட்கள் வரை கெட்டுப் போகாமலும் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பால் பாக்கெட்டுகளை குளிர்சாதன பெட்டிகளில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts