TamilSaaga

“கடந்த 10 ஆண்டுகளில் இது முதல் முறை” : சிங்கப்பூரில் விலையேற்றத்தை அறிவித்த ComfortDelGro டாக்ஸி – ஏன்?

சிங்கப்பூரில் வரும் மார்ச் மாதம் முதல், ComfortDelGro டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள், Flag Down கட்டணங்கள் மற்றும் தூர நேர மற்றும் காத்திருப்பு கட்டணங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ComfortDelGroவில் உள்ள எல்லா டாக்சிகளிலும் Flag Down 20 காசுகள் அதிகரிக்கும். அதாவது ஹூண்டாய் ஐ-40 டாக்ஸியின் Flagத Down கட்டணம் S$3.70ல் இருந்து S$3.90 ஆக உயரும். Flag Down என்பது சாலையில் நாம் செல்லும்போது செயலி மூலம் டாக்ஸி புக் செய்யாமல் நாமாக முன்வந்து அருகில் செல்லும் டாக்ஸிகளை நிறுத்தி பயணம் குறித்து கேட்பதாகவும்.

“சிங்கப்பூர் Star Vista Mall” : தடதடவென வந்திறங்கிய SAF ஹெலிகாப்டர்கள் – தூள் கிளப்பிய Counter-Terrorism அட்டாக்

Toyota Prius, Hyundai Ioniq, Kona மற்றும் LimoCab மற்றும் MaxiCabகளுக்கான ஆரம்பக் கட்டணம் S$3.90ல் இருந்து $4.10 ஆக உயரும் என்று ComfortDelgro தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வரும் மார்ச் 1ம் தேதி காலை 6 மணிக்கு அமலுக்கு வரும். ComfortDelgro சிங்கப்பூரில் சுமார் 10,000 டாக்சிகளை இயக்குகிறது, இந்நிலையில் இந்த கட்டண அதிகரிப்பு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றம் பெற்றுள்ளது. Cabகளின் அதிக இயக்கச் செலவுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை “அவசியம்” என்று ComfortDelGro ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

“கடந்த ஆறு மாதங்களில் மட்டும், உலகப் பொருளாதாரங்கள் தொற்றுநோயிலிருந்து தொடர்ந்து மீண்டுவருவதால், எண்ணெய் விலைகள் அதிகரித்து வருவதற்கு ஏற்ப, எரிபொருள் விலைகள் சராசரியாக சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று ComfortDelGro தெரிவித்துள்ளது. Flag Down கட்டண உயர்வுடன், தூர நேர மற்றும் காத்திருப்பு கட்டணங்களும் உயரும். தூர நேரக் கட்டணங்களுக்கு, சாதாரண டாக்சிகளுக்கு ஒவ்வொரு 400மீட்டருக்கும் (அல்லது 10கிமீக்குப் பிறகு 350மீ) இரண்டு சென்ட் அதிகரிப்பு (S$0.22லிருந்து S$0.24 வரை) இருக்கும். லிமோசின்கள் மூன்று-சத அதிகரிப்பைக் காணும் (S$0.30 இலிருந்து S$0.33 வரை), என்று ComfortDelGro தெரிவித்துள்ளது.

அதேபோல் காத்திருப்பு நேரங்களுக்கு, சாதாரண டாக்சிகளுக்கு ஒவ்வொரு 45 வினாடிகளுக்கும் காத்திருப்பு நேரத்திற்கு இரண்டு-சென்ட் அதிகரிப்பு (S$0.22 முதல் S$0.24 வரை), மற்றும் லிமோசின்களுக்கு மூன்று-சத அதிகரிப்பு (S$0.30 முதல் S$0.33 வரை) இருக்கும். அரசாங்க நிவாரணம் மற்றும் வாடகைத் தள்ளுபடியுடன் கூட, கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 தொற்றுநோயால் டாக்ஸி ஓட்டுநர்களின் வருமானம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ComfortDelGro குறிப்பிட்டது.

நீங்கள் “வைரஸ் குடும்பம்” : சிங்கப்பூரில் செவிலியரை புண்படுத்திய அண்டை வீட்டார் – நீதிபதி சொன்ன பளார் பதில்!

“ஒரு நிறுவனமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களுக்கு (ஓட்டுநர்கள்) எங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளோம். தினசரி வாடகைத் தள்ளுபடியை இப்போது வரை நீட்டித்துள்ளோம். அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் மற்றும் பணவீக்கத்தால், எங்கள் வண்டிகளின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு இந்தக் கட்டண சரிசெய்தல் உதவும் என்று எதிர்பார்க்கிறோம் என்று ComfortDelGro-ன் பிரைவேட் மொபிலிட்டி குழுமம் மற்றும் ComfortDelGro Taxi ஆகியவற்றின் CEO திரு. ஜாக்சன் சியா கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts