TamilSaaga

சிங்கப்பூரில் காலையிலேயே பெரும் சோகம்! ஜூரோங் ஈஸ்ட் குடியிருப்பில் தீ விபத்து.. ஒருவர் பலி!

சிங்கப்பூர்: செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 16) காலை ஜூரோங் ஈஸ்ட் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.

ஒன்பதாவது மாடியில் அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

பிளாக் 236 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாலை 2.50 மணியளவில் SCDF-க்கு தகவல் கொடுக்கப்பட்டது என்றும், தீயணைப்புப் படையினர் அங்கு வந்தபோது, குடியிருப்புக்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தீ ஏற்பட்ட உடனேயே அந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெளியேறிவிட்டனர். கடுமையாக புகை வெளியானதால், தீயணைப்பு வீரர்கள் மூச்சுத்திணறல் கருவிகளை அணிந்து கொண்டு புகை நிரம்பிய அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து தீயை அணைத்தனர், மற்றொரு குழு அந்த குடியிருப்பில் சிக்கியிருந்த மூன்று நபர்களை மீட்பதற்காக பக்கத்திலிருந்த ஒரு யூனிட்டிற்குள் நுழைந்தது.

வெளிப்புறத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக பிரம்மாண்ட ஏணி பயன்படுத்தப்பட்டது. பிறகு, மூன்று வாட்டர் ஜெட் மூலம் தீ அணைக்கப்பட்டது.

எனினும், இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related posts