TamilSaaga

“சாங்கி விமான நிலைய முனையம் 3” : விபத்துக்குள்ளான SBS பேருந்து – மருத்துவமணையில் மூவர்

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 22) SBS டிரான்ஸிட் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உடனடியாக மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனடியாக ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவர் மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

59 வயதான ஆண் பஸ் டிரைவர் மற்றும் இரண்டு பயணிகளான 34 வயது பெண் மற்றும் 42 வயது ஆண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவோடு இருந்ததாக போலீசார் CNAவிடம் தெரிவித்தனர். மேலும் காயம்பட்ட அவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று SCDF தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாங்கி விமான நிலைய குழு (CAG) வெளியிட்ட தகவலின்படி, விமான நிலைய செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் “ஸ்கைட்ரெயின்” பாதையில் எந்த சேவைகளும் இயங்கவில்லை என்று கூறினார்கள். மேலும் “ஒரு விபத்து நடந்ததை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் இதனால் உள்கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று எங்கள் பொறியாளர்கள் மதிப்பிடுகிறார்கள்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர். பஸ் ஆபரேட்டர் SBS டிரான்சிட் கூற்றுப்படி, சர்வீஸ் 27ன் பஸ் கேப்டன் டெர்மினல் 3ன் அடித்தளத்தில் இருந்து டெர்மினல் 1 நோக்கி பிற்பகல் 1 மணியளவில் வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் எங்கள் அக்கறையை நீட்டிக்க விரும்புகிறோம். மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். இதற்கிடையில், காவல்துறையினரின் விசாரணையில் நாங்கள் உதவுகிறோம்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts