TamilSaaga

இறந்தது வங்கதேச ஊழியர் என்றாலும்.. போனது உயிர் தானே… வேலைப்பார்த்த இடத்திற்கு அருகிலேயே மிதந்த உடல் – வெளிநாட்டு ஊழியர்கள் கண்ணீர் அஞ்சலி!

SINGAPORE: சிங்கையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) காலை துவாஸில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கரையோர கிரேன் ஒன்று சரிந்ததில் கடலில் தவறி விழுந்த வெளிநாட்டு ஊழியரின் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை காலை 10.40 மணியளவில், சிங்கப்பூரின் துவாஸ் கப்பல் கட்டுமான தளத்தில், கிரேன் நின்று கொண்டிருந்த Concrete தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், கிரேன் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

51 Pioneer Sector 1-ல் நடந் இந்த விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கடலில் தவறி விழுந்தார். 29 மற்றும் 31 வயதுடைய மற்ற இரண்டு வங்கதேச தொழிலாளர்கள், 48 வயதான சீன நாட்டவர் மற்றும் 40 வயதான உள்ளூர் தொழிலாளி ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதையடுத்து, கடலில் விழுந்த ஊழியரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், கப்பலில் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டதாகவும் MOM தெரிவித்தது. முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கெப்பல் ஷிப்யார்ட் தெரிவித்தது.

மேலும் படிக்க – வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு – இனி 7 நாட்கள் quarantine-ல் இருக்க வேண்டிய அவசியமில்லை!

இந்நிலையில், இன்று (ஆக.24) விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே கடலில் விழுந்த ஊழியரின் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தது, கெப்பல் ஷிப்யார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், 38 வயதான அந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவிகளை வழங்கி வருவதாகவும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

“கெப்பல் ஷிப்யார்ட் ஒவ்வொரு தொழிலாளியின் பாதுகாப்பையும் வாழ்க்கையையும் மதிக்கிறது, மேலும் இந்த துயர சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்,” என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இறந்த வெளிநாட்டு ஊழியர் சிங்கப்பூரைச் சேர்ந்த குமரன் மரைன் (Kumarann Marine) எனும் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts