TamilSaaga

சிங்கப்பூரில் உங்கள் வேலைவாய்ப்பு உரிமைகள் குறித்து உதவி தேவையா? : MOM நடத்தும் “நேர்காணல்” – முழு விவரம்

சிங்கப்பூரில் உங்கள் வேலைவாய்ப்பு உரிமைகளுக்கு உங்களுக்கு உதவி தேவையா?, வேலைவாய்ப்புச் சட்டம் மற்றும் CPF சட்டத்தின்படி பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் முறையே தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளைப் புரிந்துகொள்ள “Work Right” எனப்படும் வேலைத் திட்டம் உதவுகிறது. “இதன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, உங்களது வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்காக, வேலைவாய்ப்பு ஆலோசனை கிளினிக்குகளை அக்டோபர் முதல் டிசம்பர் 2021 வரை நடத்தவுள்ளோம்”. என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட Slotகள் மட்டுமே உள்ளன. எனவே எங்கள் ஆலோசகர்களுடன் பேசுவதற்கு MOM வழங்கியுள்ள இந்த இணையத்தை அணுகி அதில் பதிவு செய்து பயன்பெறுங்கள். “வேலைவாய்ப்புச் சட்டம்”, பணியில் உள்ள அடிப்படை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிர்ணயிக்கிறது. மற்றும் நீங்கள் முழுநேர, பகுதிநேர, தற்காலிக அல்லது ஒப்பந்த ஊழியர்களாக இருந்தாலும், அனைத்து ஊழியர்களையும் (கடற்படையினர், வீட்டுப் பணியாளர்கள், சட்ட வாரிய ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தவிர) உள்ளடக்கியது இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சகம் வெளியிட்ட பதிவை காண..

தமிழ், மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கில மொழிகளில் நீங்கள் இந்த நேர்காணலை ஏற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்டுள்ள இணையத்தில் சென்று கேட்கும் தகவலக்கை பூர்த்தி செய்து இந்த நேர்காணலில் பங்கேற்கலாம்.

Related posts