TamilSaaga

Exclusive : பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டதா உங்கள் சிங்கப்பூர் – இந்திய பயணம்? இனி Ticket Date Change மற்றும் Re-fund உண்டு

சிங்கப்பூர் தற்போது தனது VTL சேவைகளை மலேசியா, இந்தியா உள்பட 20க்கும் அதிகமான நாடுகளுடன் செயல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏனைய நாடுகளில் இருந்து மக்கள் மற்றும் சிங்கப்பூரில் பணி செய்ய விரும்பும் தொழிலாளர்கள் சிங்கப்பூருக்குள் வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலை ஒருபுறம் இருக்க சிங்கப்பூரில் இருந்து அவசர தேவைகளுக்கு மீண்டும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் இந்தியர்கள். இந்த இக்கட்டான சூழலில் விமான சேவை நிறுவனத்தின் சில நிபந்தனைகள் பயணிகளை கதிகலங்க வைத்தது.

இதையும் படியுங்கள் : Miss Universe போட்டியில் சிங்கப்பூரை பெருமைப்பட வைத்துள்ள “நந்திதா”

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை மூலம் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு அந்த பயணி பயணம் மேற்கொள்ள முடியாமல் போகின்றது. அதே போல அப்படி அந்த பயணம் தடைபடும் பட்சத்தில் அவருடைய விமான டிக்கெட் நாள் மாற்றமோ அல்லது Re-Fund கிடைத்த நிலைக்கு மாறியது. கடந்த 6 மாதங்களாக பல பயணிகள் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அதற்கொரு தீர்வினை கண்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

இனி டிக்கெட் முன்பதிவு செய்து புறப்படும் நேரத்தில் பெருந்தொற்று பாதித்தால் அவர்களால் தற்போது வேறு தேதிக்கு தங்கள் பயணத்தை மாற்றவோ அல்லது Re-fund பெற ஒரு வாய்ப்போ உள்ளது. இதற்கு அவர்கள் பயண தேதியில் அவர்களுக்கு பெருந்தொற்று Positive வந்ததற்கான சான்றிதழ், அதே போல மீண்டும் அவர்கள் குணமடைந்ததற்கான Negative சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் உரிய விசா ஆகியவற்றை சிங்கப்பூரில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உரிய ரசீதை பெற்றபின்னர் நேரடியாக அலுவலகம் சென்று தேதி மாற்றம் செய்யலாம்.

மேலும் தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு முன்பதிவு செய்த டிக்கெட் பணம் Voucher வாயிலாகவோ அல்லது Re-fund முறையிலோ திரும்பத்தரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Coleman Street, 03 – 07/08, Peninsula Shopping Centre, Singapore 179804 என்ற இடத்தில் தான் சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் cm@airindiasin.com, reservation@airindia.com.sg, sales@airindia.com.sg ஆகிய மின்னஞ்சல் மூலமும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

Source :

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம்
திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts