TamilSaaga

“சுமார் 15 மணிநேரம் பாதித்த சிங்கப்பூர் DBS சேவை” : வருத்தம் தெரிவித்த வங்கி நிர்வாகம்

சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக DBS வங்கி மற்றும் POSB பயனர்களுக்கான சேவைகளை முடக்கிய “டிஜிட்டல் வங்கிச் சிக்கல்” நேற்று புதன்கிழமை (நவம்பர் 24) காலை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டிபிஎஸ், தனது பேஸ்புக் பதிவில் நேற்று காலை 10.50 மணிக்கு வெளியிட்ட ஒரு பதவில், புதன்கிழமை அதிகாலையில் அதன் சேவைகள் மீட்டமைக்கப்பட்டதாகக் கூறியது. ஆனால், “துரதிர்ஷ்டவசமாக, டிஜிட்டல் வங்கிச் சிக்கல் மீண்டும் நிகழ்ந்துள்ளது, இது எங்கள் சேவைகளைப் பாதித்துள்ளது” என்று அது மேலும் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் இருமார்கமாக 30 விமானங்களை இயக்கும் Scoot

“இது எங்கள் வாடிக்கையாளர்களில் பலரைப் பாதித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் நிலைமையைத் சரிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.” என்றும்அந்த பதிவில் DBS தெரிவித்துள்ளது. முன்னதாக, காலை 8.15 மணியளவில், DBS தனது டிஜிட்டல் வங்கி சேவைகள் அனைத்தும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாலை 2 மணி வரை மீட்டமைக்கப்பட்டதாகக் கூறியது. நிலைமையின் தீவிரத்தையும் அது ஒப்புக்கொண்டது.

ஆனால் சில பயனர்கள் நேற்று காலை 9 மணி வரை சேவைகளை அணுக முடியவில்லை என்று கூறினார். மேலும் நீண்டகால இடையூறு குறித்து புகார் செய்ய DBS-ன் பேஸ்புக் பக்கத்திற்கு சென்றனர். செயலிழப்பு கண்காணிப்பு இணையதளமான Downdetectorன் தகவல் படி, நேற்று காலை 9.15 மணிக்கு 350-க்கும் மேற்பட்ட செயலிழப்பு புகார்கள் பெறப்பட்டன. செவ்வாய்கிழமை மதியம் 1 மணியளவில் ஒரு பேஸ்புக் பதிவில், DBS வாடிக்கையாளர்களுக்கான eNETS டெபிட் சேவை தற்காலிகமாக கிடைக்கவில்லை என்று Nets கூறியிருந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

“ஈநெட்ஸ் டெபிட் இன்டர்நெட் பேங்கிங்கைப் பயன்படுத்தும் டிபிஎஸ் வாடிக்கையாளர்களால் தற்போதைக்கு எந்தப் பரிவர்த்தனையும் செய்ய முடியாது. விரைவில் சேவையை மீட்டெடுக்க நாங்கள் டிபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.

Related posts