இந்த 2021ம் ஆண்டில் அண்டை நாடான இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெற்ற ஸ்கூல் ஆர்ட் போட்டியில் தங்களுடைய மாணவர்களின் உற்சாகமான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை பகிர்ந்து கொள்வதில் KKIS பெருமை கொள்கிறது என்று அந்த கல்வி நிறுவனம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
அந்த பதிவில் “நாங்கள், கே.கே.ஐ.எஸ்-ல், பல இளம் மனதிற்கு ஊக்கமளிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் முயற்சி செய்கிறோம். இந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் அளித்த ஒரு வலுவான ஒத்துழைப்பிற்காக நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றம் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
ஓவியம் வரைதல், பேச்சு போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது. மாணவர்கள் மிகவும் ஆர்வகமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை அளித்த அனைத்து தலைவர்களையும் மாணவர்கள் தங்கள் பேச்சில் நினைவுகூர்ந்தார்.