TamilSaaga

மூன்று நாயகர்கள் இணைந்து அசத்தும் “யூகி” – அசத்தலாக வெளியான “மோஷன் போஸ்டர்”

பிரபல நடிகர்கள் நடராஜன், கதிர் மற்றும் நரேன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “யூகி”. பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. பெருந்தொற்று பரவல் காரணமாக மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராஜதாஸ் குரியாஸ் உள்பட நான்கு பேர் தயாரித்துள்ளனர். Zac Harriss என்ற பிரபல மலையாள இயக்குநர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் நரேன், நடராஜன், கதிர் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர் பிரதாப் போத்தன் நடிகர்கள் ஜான் விஜய், முனீஷ் காந்த் நடிகைகள் வினோதினி, அஞ்சலி ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மலையாளத்தில் ஒருசில படங்களை இயக்கிய நிலயில் Harriss கோலிவுட் உலகில் கால்பதிப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.

Related posts