TamilSaaga

பிரான்ஸ் நாட்டின் “சுகாதார பாஸ்” : ஐந்தாவது வாரத்தை எட்டிய மக்களின் போராட்டம்

தென்னாபிரிக்கா நாட்டில் இருந்து பரவியதாக கருதப்படும் பீட்டா வகை கிருமி தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிவேகமாக பரவி வருகின்றது. மேலும் பிரான்ஸ் நாட்டில் பெருந்தொற்றின் 4ம் அலை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தடுப்பூசி அல்லது சமீபத்திய எதிர்மறை COVID-19 சோதனைக்கு சான்றாக சுகாதார பாஸ் தேவைப்படுவது கட்டாயம் என பிரான்ஸ் அரசு அண்மையில் அறிவித்ததை அடுத்து தொடர்ந்து மக்களிடையே பெரும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் தடுப்பூசி மையத்தை சேதப்படுத்திய நிகழ்வு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சுகாதார பஸ்சுக்கு எதிரான மக்களின் போராட்டம் தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து 5வது வாரத்தை எட்டியுள்ளது. மக்களின் போராட்டம் தற்போது கட்டுக்கடங்காமல் போய்வருகின்றது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் பிரான்சில் 20 க்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி மையங்கள் மற்றும் பிற சுகாதார வசதிகளை பல தாக்குதல்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர். பிரான்ஸ் நாடு தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க முயலும் நடவடிக்கைகளில் தற்போது நாடு போராட்ட களமாக மாறியுள்ளது.

Related posts