TamilSaaga

“சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : இந்தியர்களுக்கு முறுக்கு வழங்கிய குழந்தைகள் – புகைப்படங்கள் உள்ளே

சிங்கப்பூரில் பாலர் பள்ளி குழந்தைகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாள நண்பர்களுக்கு தங்கள் பாராட்டுக்களைக் வெளிப்படுத்து முறையில் சில ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். இந்த தகவலை தற்போது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பக்லியில் உள்ள K2 பாலர் பாடசாலையின் பாலர் பள்ளி மாணவர் குழு சமீபத்தில் போஸ்ட் கார்டுகளில் தங்களுடைய பாராட்டு வார்த்தைகளை வரைந்து அதை சிங்கப்பூரில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமர்ப்பித்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாள நண்பர்களுக்கான பராமரிப்புப் பொதிகளுக்கு நிதி திரட்ட அந்த அஞ்சல் அட்டைகள் பெற்றோருக்கு விற்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பராமரிப்புப் பொதிகளில் உள்ள பொருட்கள், அவர்களின் தினசரி தேவைகளான முகமூடிகள், துடைப்பான்கள், சாக்ஸ் மற்றும் டவல்,பவர் பேங்குகள், தின்பண்டங்கள் முதல் சப்ளிமெண்ட்ஸ் வரை அனைத்தும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு பராமரிப்புப் பொதியிலும் வெவ்வேறு தேசங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வெவ்வேறு சிற்றுண்டி வைக்கப்பட்டது.

இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த தொழிலாளர்கள் முறுக்கு அளிக்கப்பட்டது.அதே நேரத்தில் மியான்மர் மற்றும் தாய்லாந்திலிருந்து வந்தவர்களுக்கு உலர்ந்த மாம்பழங்களைப் அளித்தனர். சைவ மாலா சிற்றுண்டியும் சீனத் தொழிலாளர்களுக்கான பராமரிப்புப் பொதிகளில் பேக் செய்யப்பட்டது.

Related posts