TamilSaaga

“சிங்கப்பூரில் குளிர்சாதன வசதி இல்லாமல் இறைச்சியை சேமித்த ஆன்லைன் ஸ்டார்” – 11,000வெள்ளி அபராதம்

சிங்கப்பூரில் உரிமம் பெறாத குளிர்பானக் கடையில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சேமித்து வைத்திருப்பதற்காகவும், இறைச்சியை குளிரூட்டி இல்லாமல் வைத்திருந்ததற்காகவும் ஆன்லைன் மளிகைக் கடையானா OurPasar Essentials Pte Ltd கடைக்கு 11,000 வெள்ளி தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், முஹம்மது ஷபீஸான் பின் சைக் அப்துல் காதர், அந்த நிறுவனத்தில் குற்றம் நடப்பதை தடுக்க சரியான முயற்சிகளை எடுக்க தவறியதற்காக அவருக்கு 9,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், OurPasar Essentials Pte Ltdன் ஊழியர்கள் எந்த வித குளிர்சாதனமும் இல்லாமல் மேஜைகளில் போடப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவு பாக்கெட்டுகளை கையாண்டது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

மேலும் நடைபெற்ற விசாரணையில், அந்த நிறுவனம் உரிமம் பெறாத குளிர்பானக் கடையில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சேமித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சேமித்து வைக்க விரும்பும் உணவு நிறுவனங்கள் SFAலிருந்து குளிர்பான கடை உரிமம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SFA அங்கு சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த சுமார் 312 கிலோ இறைச்சி மற்றும் கடல் உணவுகளை கைப்பற்றியது. மேலும் 125 கிலோ குளிரூட்டப்படாத மாட்டிறைச்சி மற்றும் கோழியையும் கைப்பற்றி அப்புறப்படுத்தியது.

Related posts