கடந்த சில தினங்களுக்கு ஜுராங் துறைமுகத்தில் பெருந்தொற்று கிளஸ்டர் தோன்றிய பின்னர் அந்த துறைமுகத்தின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று மீன் கடை உரிமையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மீன்பிடி சந்தைகளிலும் உள்ள மீன் பிடிப்பவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் கடந்த ஜூலை 17 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சுமார் 1000 தொற்று சம்பவங்களுடன் ஜூரோங் பெருந்தொற்று குழுமம் நாட்டின் மிகப்பெரிய தொற்று குழுமத்தில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் அனைத்து சந்தைகளுக்கும் சுய பெருந்தொற்று பரிசோதனை கருவி வழங்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்தது. ஜுராங் ஃபிஷர் துறைமுகத்தில் தனிநபர்களிடையே பரவிய பெருந்தொற்று குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.
மேலும் நேற்று முன்தினம் ஜூலை 30ம் தேதி வரை ஜுராங் ஃபிஷர் துறைமுகம், தூய்மைப்படுத்தும் பணிக்காக மூடப்படும் என்றும் அறிவித்தது. இதனையடுத்து நேற்று ஜூலை 31ம் தேதி மீண்டும் ஜூரோங் துறைமுகம் தன்னுடைய செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது. பொதுவாக மிகுந்த பரபரப்புடன் காணப்படும் இந்த துறைமுகம் நேற்று சற்று மந்தநிலையிலேயே திகழ்ந்தது.
நேற்று காலை திறக்கப்பட்டதில் இருந்து காலை 10 மணிவரை 10க்கும் குறைவான வேலையாட்களே அங்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் துறைமுகம் திறக்கப்பட்டாலும் மொத்தமாக மீன்கள் இறக்கவும், மொத்தமாக இறக்கிய மீன்களை விற்பனை செய்யவும் நாளை திங்கள் முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.