TamilSaaga

“சிங்கப்பூர் தடுப்பூசி திட்டத்தில் இது ஒரு மையில்கல்” – சுகாதார அமைச்சர் ஓங் யே குங் பெருமிதம்

சிங்கப்பூரில், நாட்டின் பெருந்தொற்று தடுப்பூசி விகிதம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 80% மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) நிலவரப்படி இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பேஸ்புக் பதிவில் இந்த தகவலை வெளிப்படுத்தினர் சுகாதாரத் துறை அமைச்சர் ஓங் யே குங்.

வெளியான தகவலின்படி, சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு வாரமும் வீட்டு தடுப்பூசிகளுக்கு சுமார் 700 கோரிக்கைகளைப் பெறுகிறது. மேலும் இது 200 தன்னார்வ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் உதவியுடன் தனது வீட்டு தடுப்பூசி குழுக்களை 11 முதல் 33 குழுக்களாக மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது, என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து வீட்டு தடுப்பூசிகளையும் முடிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம் என்றும். இது தடுப்பூசி திட்டத்தின் இன்னொரு மயில்கள் என்றும் அமைச்சர் கூறினார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், தடுப்பூசி போடப்படாத மூன்று முதியவர்கள் தொற்று சிக்கல்களால் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பிற நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூர் அரசு தடுப்பூசி செலுத்துவதில் மிகுந்த வேகத்தில் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts