TamilSaaga

சிங்கப்பூரில் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்த இரு இந்தியர்களின் பணி அனுமதி ரத்து… மேலும் பலரிடம் சோதனை – MOM அதிரடி

சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) தங்களது பணி பாஸ் விண்ணப்பத்தில் தவறான கல்வி தகுதிகளை சமர்ப்பித்ததற்காக இரண்டு இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் நேற்று (ஜூலை 27) தெரிவித்துள்ளது.

பெயில்வால் சுனில் தத்த என்பவருக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனையும், சூத்திரதர் பிஜோய் என்பவருக்கு நான்கு வாரமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . அவர்களின் பணி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது, இப்போது அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளனர் என்று MOM தெரிவித்துள்ளது.

மேலும், இதே குற்றத்திற்காக எம்ஓஎம் வேறொரு பணி பாஸ் வைத்திருப்பவருந்த இந்திய நாட்டவரான பண்டாரே ராகவேந்திரா என்பவரையும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் மனவ் பாரதி பல்கலைக்கழகத்தின் (MBU) கல்வி தகுதி சான்றிதழ்களை அளித்துள்ள 23 வெளிநாட்டினர் மீது எம்ஓஎம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது .

இதில் மீதமுள்ள நபர்களில், 19 பேர் சிங்கப்பூரில் எதிர்கால வேலைவாய்ப்புக்கு நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதில் ஒரு நபருக்கான கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலி பட்டங்களை விற்றதற்காக MBU ஐ இந்திய அரசு விசாரிப்பதாக அறிந்த MOM முன்னெச்சரிக்கையாக சிங்கப்பூரில் விசாரணை தொடங்கியது. MBU என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும், இது 2009 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது மற்றும் உண்மையான பட்டங்களை வழங்கியது என்று MOM தெரிவித்துள்ளது. தண்டனை பெற்ற இருவர் சிங்கப்பூரில் சமையல்காரராகவும் உதவி கிடங்கு மேலாளராகவும் பணியாற்றினர் என்ற தகவலையும் அளித்துள்ளது.

Related posts