TamilSaaga

பிரான்சு Guadeloupe பிரதேசத்தில் Lockdown – தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை

பிரான்சு நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பிரான்சின் ஒரு பிரதேசத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சு Guadeloupe பிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அந்த பிரதேசத்தில் புதிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடக்கமானது சுமார் 3 வாரங்களுக்காவது நீடிக்கும் என்று அந்த பிரதேசத்தின் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த அதிகாரி பிரான்சு மேற்கு இந்திய தீவுகளில் புதிய முடக்கம் சார்ந்த நடவடிக்கைகள் நாளை (ஆகஸ்ட்.4) முதல் துவங்குவதாகவும். 8 pm முதல் 5 am வரை இந்த முடக்கமானது கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேசம் மட்டுமல்லாமல் பிரான்சின் La Reunion மற்றும் Martinique ஆகிய பிரதேசங்களிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவை கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நோக்கத்துடனான நடவடிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts