ஜூரோங் மீன்வள துறைமுகம் மொத்த சந்தை வியாபார நடவடிக்கைகளை இன்றுமுதக் (ஆகஸ்ட்.02) முதல் மீண்டும் துவங்குகிறது.
சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) முகநூல் பதிவின் படி, துறைமுகம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. குத்தகைதாரர்கள் மீண்டும் வியாபார நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் என தெரியவந்துள்ளது.
மீண்டும் திறப்பதற்கு முன் முழு துறைமுக தளத்திற்கும் இரண்டு சுற்றுகள் ஆழமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தையின் குத்தகைதாரர்களுக்கு துறைமுகத்தின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் (SMM கள்) குறித்து விளக்கப்பட்டுள்ளதாகவும் SFA தெரிவித்துள்ளது.
குத்தகைதாரர்கள் மற்றும் வர்த்தக பார்வையாளர்கள் மேம்பட்ட SMM களுக்கு ஏற்ப நேரம் மாற்றியமைக்கப் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஆரம்ப சிக்கல்கள் மற்றும் தாமதங்களை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. தேவைப்படும்போது பல்வேறு பங்குதாரர்களுடன் மதிப்பாய்வு மற்றும் செயல்முறைகளை சரிசெய்வதற்கு வேலை செய்யப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.