TamilSaaga

சிங்கப்பூர் TOTO லாட்டரி.. நேற்று (அக்.13) குலுக்கலில் 76 லட்சம் வென்ற 6 அதிர்ஷ்டசாலிகள் – பெற்ற தாயை காப்பாற்ற கடவுள் கொடுத்த பரிசு என கண்ணீர்

SINGAPORE: நேற்று (அக்.13) வியாழக்கிழமை இந்த வாரத்துக்கான இரண்டாவது TOTO குலுக்கல் நடைபெற்றது. சரியாக மாலை 6.30 மணிக்கு இந்த குலுக்கல் நடத்தப்பட்டது.

இதில் Group 1 எனப்படும் ஜாக்பாட் முதல் பரிசான 5,469,511 டாலர் யாருக்கும் கிடைக்கவில்லை. 2, 4,8 17, 22, 40 எனும் அந்த வெற்றிக்கான லாட்டரி எண்ணை யாரும் வாங்கவில்லை.

எனினும், Group 2 எனப்படும் இரண்டாம் பரிசுக்கான தொகை $93,427 டாலர் தொகையை 6 பேர் வென்றுள்ளனர். இந்திய மதிப்பில் 76 லட்சம் தொகை இவர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.

Group 3 எனப்படும் மூன்றாவது பரிசுக்கான தொகை 1,460 டாலர் தொகையை 264 பேர் வென்றுள்ளனர்.

இதில், இரண்டாம் பரிசை வென்ற நபர்களில் ஒருவரின் தாய்க்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “உண்மையில் எனக்கு இப்படியொரு பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என் தாய்க்கு கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சமீபத்தில் மிகவும் மோசமடைந்தது.

மேலும் படிக்க – தமிழகத்தில் ரயில் முன் முன் தள்ளப்பட்டு மாணவி கொலை.. ஹார்ட் அட்டாக்கில் தந்தையும் மரணம்.. குற்றங்களுக்கு சிங்கப்பூர் போல் சட்டம் வேண்டுமா?

மருத்துவர்கள் கேட்கும் தொகையை என்னால் செலவழிக்க முடியவில்லை. அதற்கு போதுமான வசதியும் இல்லை. இப்போது இந்த பணம் மருத்துவ செலவுக்கு நிச்சயம் பயன்படும். என் தாயின் உடல்நிலையை மீட்பதே இப்போது எங்களின் குறிக்கோள். toto லாட்டரிக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

உண்மையில், லாட்டரி என்பது பரிசு விழுந்தால், மாபெரும் யோகம் தான். ஆனால், அது எப்போ, எப்படி, யாருக்கு கிடைக்கும் என்று தெரியாது. என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் கிட்டும் என்ற நம்பிக்கையில் லாட்டரி வாங்குவதையே முழு நேர வேலையாக வைத்திருப்பது தான் இங்கு பிரச்சனையே. லாட்டரி வாங்குவது தப்பில்லை. அதற்கு அடிக்ட் ஆவது தான் தவறு.

இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள், இதற்கு முழு நேர அடிமையாகிவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts