TamilSaaga

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள்.. இங்கு இருந்தபடியே வேறு வேலைக்கு மாற ஒரு வாய்ப்பு.. MOM கொடுத்த அனுமதி

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கேயே வேறு வேலைக்கு மாறுவது என்பது சற்று சிரமமான காரியம் தான் என்பதை இங்குள்ள அனைத்து புலம்பெயர்த் தொழிலாளர்கள் அனைவரும் அறிவார்கள்.

ஆனால் தற்போது Process Sectorல் பணிபுரியும் ஊழியர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விஷயமாக இன்று முதல் அதாவது ஜூலை 1ம் தேதி முதல் புதிய விதி ஒன்று தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதுவும் NTS, NAS மற்றும் PRC வகையின் கீழ் உள்ள நாடுகளில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

அமலான புதிய விதியின்படி சிங்கப்பூரில் Process Sectorல் ஏற்கனவே பணிபுரிந்து வரும் ஊழியர்களை சிங்கப்பூரை விட்டு வெளியேறாமல் அவர்களை தற்போது மீண்டும் சிங்கப்பூரிலேயே வேலைக்கு அமர்த்த முடியும். இதற்கான வழிமுறை தற்போது அமலாகியுள்ளது.

இனி சிங்கப்பூரர்களுக்கு தடையின்றி சிக்கன் கிடைக்கும்.. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி – SFA அறிவிப்பு

இதன்படி இன்று ஜூலை 1, 2022 முதல், பெருந்தொற்றுக்கு முன் நடைமுறையில் இருந்த நிலை போல இல்லாமல் Process Sectorல் பணி அனுமதி (Work Permit) காலாவதியாகும் நிலையில் அதாவது அதிகபட்சம் 40 முதல் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன் அந்த தொழிலாளர்களை இங்குள்ள புதிய முதலாளிகள் வேலைக்கு அமர்த்த முடியும்.

இதற்கு தகுதியான வெளிநாட்டு ஊழியர்கள் யார் யார்?

தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் Process Sectorல் உள்ள ஊழியர்களில் NTS, NAS மற்றும் PRC ஆகிய வகையின் கீழ் வரும் நாடுகளை சேர்ந்தவர்கள் இதற்கு தகுதி பெறுவர்கள்.

NTS, NAS மற்றும் PRC என்றால் என்ன?

NTS என்பது Non-Traditional Sources ஆகும், இந்த வகையின் வரும் நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பங்களாதேஷ், மியான்மார் மற்றும் பிலிப்பைன்ஸ்.

NAS என்பது North Asian Sources என்பதாகும், இந்த வகையில் வரும் நாடுகள் ஹாங் காங் (HKSAR Passport), மக்காவு, சவுத் கொரியா மற்றும் தைவான்.

PRC என்பது Peoples Republic of Chinaவை குறிக்கின்றது.

ஆகவே மேற்குறிப்பிட்ட வகையை சேர்ந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து Process Sectorல் பணிபுரிபவர்கள் 40 முதல் 21 நாட்களுக்கும் காலாவதியாகும் Work Permitல் இருந்தால் அவர்களை தங்கள் நிறுவனத்திற்கு மாற்ற முதலாளிகள் ஆவணம் செய்யலாம்.

சிங்கப்பூரர்களுக்கு மேலும் ஒரு பேரிடி.. மூன்றாம் காலாண்டில் உயரும் மின்சார கட்டணம் – உக்ரைன் பிரச்சனை ஒரு காரணமா?

சிங்கப்பூரில் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது முதலாளிகளுக்கு எந்த விதத்தில் உதவும்?

ஏற்கனவே சிங்கப்பூரில் பணிபுரிந்தவர் என்றார் நல்ல அனுபவம் வாய்ந்த பயணியாளராக இருப்பார். மேலும் புதிய தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான செலவை இதன் மூலம் குறைக்கமுடியும்.

இது குறித்த கூடுதல் விவரங்களை தெளிவாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts