TamilSaaga

தமிழகம் விதித்த “புதிய” கட்டுப்பாடு : சிங்கப்பூர் உள்ளிட்ட12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அமல்

தற்போது Omicron என்று அறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் ஒன்றின் பரவல் எதிரொலியாக, 12 நாடுகளில் இருந்து தமிழகம் வருகின்ற பயணிகளுக்கு தற்போது கடு்ம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் உருமாறிய புதிய பெருந்தொற்று வைரஸான ஓமைக்ரான் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவக் கூடும் என்பதால் பல நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.

இதையும் படியுங்கள் : துவங்கியது இந்தியா – சிங்கப்பூர் VTL சேவை

தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளுக்கான விமான சேவைகளை உலக நாடுகள் பல ரத்து செய்தும் கட்டுப்பாடுகளை விதித்தும் இந்த புதிய வைரசுக்கு எதிராக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய பெருந்தொற்று டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழ், கட்டாய 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நமது சிங்கப்பூர் வர ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு முழுமையாக எல்லைகளை மூடியுள்ளது.

இத்தாலியில் இதைவிட கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு ஆப்ரிக்க நாடுகளின் பயணிகளுக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியாஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜெர்மனி தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பா யூனியன் நாடுகள் தனிப்பட்ட வகையில் இதே தடையை விதித்துள்ளது. தென்னாபிரிக்க பயணிகளுக்கு மற்ற அண்டை நாடுகளிலும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓமிக்ரான் பரவிய நாடுகளில் இருந்து இதற்கு முன்பே இந்தியா வந்தவர்களையும் சோதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தீவிர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். ஓமிக்ரான் கொரோனா பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிர சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மற்றும் அதனை தடுக்க இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. மேலும், சர்வதேச விமான பயணிகளை அதிக முக்கியத்துவம் அளித்து கண்காணிப்பது மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதித்துள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓமைக்ரான் பரவல் காரணமாக, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே,ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாட்டு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts