TamilSaaga

“சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்” : பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

நேற்று உலகம் முழுவதும் உலக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரிலும் பல பாதுகாப்பான கொண்டாட்டங்களுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் டான் சீ லெங் அவர்களுக்கு இந்த கொண்டாட்டங்களில் பங்கு கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்ட காணொளியில் “நேற்று கிராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில் நடந்த International Migrants Day கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி”.

இதையும் படியுங்கள் : ஆயுள் முழுக்க சிங்கப்பூருக்குள் நுழைய தடை

“இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் கருப்பொருள் “நம் கைகளை இணைப்போம், பிணைப்புகளை உருவாக்குவோம்” என்பதாகும். எங்கள் மதிப்புமிக்க பங்காளிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த சிறப்பு விழாவைக் கொண்டாட ஒன்றுசேர்ந்ததைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது”. “எங்களின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகள், அரசு சாரா நிறுவனங்கள், தங்கும் விடுதி நடத்துபவர்கள், முதலாளிகள் மற்றும் இளைஞர் குழுக்கள் போன்ற எங்கள் கூட்டாளிகளின் ஆதரவு இல்லாமல் சாத்தியமாகியிருக்காது”.

மனிதவள அமைச்சகம் சிங்கப்பூர்

“பொழுதுபோக்கு மையங்களில் எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஃபுட்சல் போட்டியை ஏற்பாடு செய்ததற்காக SportSG-ன் கீழ் உள்ள டீம் நிலா போன்ற கூட்டாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் பல்வேறு வேடிக்கையான செயல்பாடுகளை ஏற்பாடு செய்ததற்காக சிங்கப்பூர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் தி பிரைட் ஃபிளிப்சைட் ஆகியவற்றின் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.”

“Friends of ACE (FACE) வாலண்டியர் மற்றும் Partner விருதுகளின் ஒரு பகுதியாக எங்களது சில கூட்டாளர்களுக்கு விருதுகளை வழங்கிய பெருமை எனக்கு கிடைத்தது. எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் எங்கள் பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தன்னார்வலர்களின் சிறந்த பங்களிப்புகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.”

எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்வதற்கு முழு சமூக முயற்சியும் தேவைப்படுகிறது, அது எங்கள் கொண்டாட்டங்களில் வெளிப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts