TamilSaaga

“இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் கருத்து” : சிங்கப்பூரில் 21 வயது நபர் நாளை கோர்ட்டில் ஆஜர்

சிங்கப்பூரில் பிற மனிதர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் இடுகைகளை வெளியிட்டதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ஒருவர், நாளை திங்கள்கிழமை (டிசம்பர் 20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு ஜூன் 7 மற்றும் 8-க்கு இடையில், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் கருத்துகள் மற்றும் அச்சுறுத்தல்களை இடுகையிட்ட இன்ஸ்டாகிராம் பயனரைப் பற்றி பல புகார்கள் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் “நாம் தமிழர் கட்சி செயல்பாடுகளில்” ஈடுபட்ட தமிழ் ஊழியர்

அவர் வெளியிட்ட இடுகைகளில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வெறுப்பு கருத்துகள் இருந்தன என்பது குறிப்படத்தக்கது. அப்போது 19 வயதான அந்த நபர், கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி ஜூரோங் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மடிக்கணினி, கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் பயனர்கள் அந்த நபரை டெமாசெக் பாலிடெக்னிக்கின் (TP) மாணவர் என்று அடையாளம் கண்டுள்ளதாக கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அந்த TP நிறுவனம், தனது ட்விட்டரில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தனது மாணவர்களின் புண்படுத்தும் கருத்துக்களை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் கூறியிருந்தனர். எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே வார்த்தைகளைப் பேசிய குற்றத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான செயல்கள் குறித்து தீவிர கவனம் செலுத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. “பல்வேறு இனங்கள் அல்லது மதங்களுக்கிடையில் தீய எண்ணம் மற்றும் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை வெளியிடும் அல்லது நடவடிக்கை எடுக்கும் எந்தவொரு நபரும் கடுமையாக கையாளப்படுவார்கள்” என்றும் அது கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts