சிங்கப்பூரில் 23 வயது இளம்பெண்ணை துரத்தி சென்று சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் இந்தியருக்கு நேற்று 16 ஆண்டு காலம் சிறை மற்றும் பிரம்படிகள் அறிவித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
23 வயதான கல்லூரி மாணவி சம்பவ தினத்தன்று கல்லூரிக்கு செல்வதற்கு தவறான ரயிலில் ஏறி விட்டதால் கிராஞ்சி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். அதன் பின்னர் பேருந்து பிடித்து கல்லூரிக்கு செல்ல முயன்ற பொழுது தான் அவருக்கு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.அப்பொழுது தனது காதலருடன் செல்போனில் பேசிய அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.எனவே பேருந்து நிறுத்தத்தில் பலரும் இருந்ததால் தனியாக பேச வேண்டும் என்ற முடிவெடுத்த பெண் அங்கிருந்து சில நிமிடம் நடக்க தொடங்கினார். அப்பொழுது செல்போன் பேசிக் கொண்டே கவனிக்காமல் நீண்ட தூரத்துக்கு தனியாக நடந்து வந்து விட்டார்.அப்பொழுது அங்கு இருந்த இந்தியாவை சேர்ந்த சின்னையா கார்த்திக் என்ற 26 வயது இளைஞன் அந்தப் பெண்ணிடம் சென்று பேச தொடங்கியுள்ளார்.
அந்தப் பெண் அவரிடம் பேச்சு கொடுக்காமல் நடந்து செல்லவே இவர் அந்த பெண்ணை பின் துரத்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்ணை முதுகில் தாக்கி துன்புறுத்தி தனியாக இழுத்துச் சென்றுள்ளார்.அதற்கு முன்னதாக நடந்த சம்பவத்தை அந்தப் பெண் தன் காதலனுக்கு தெரிவிக்கவே அபாயம் உணர்ந்து காதலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த பொழுது அந்தப் பெண் இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்ததுஅதன் பின்னர் சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போலீசார் நடந்த சம்பவத்தை உறுதி செய்து இளைஞரை கைது செய்தனர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொழுது தீர்ப்பானது நேற்று வெளியாகியுள்ளது.இந்தியாவில் இருந்து பிழைப்பிற்காக சிங்கப்பூருக்கு சென்ற இந்த மாதிரியான சம்பவத்தில் ஈடுபட்டதற்காக தீர்ப்பளிக்கப்பட்டது அவமானத்திற்குரிய விஷயமாகும். வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது வேலை செய்ய மட்டுமே வந்துள்ளோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டால் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.