TamilSaaga

நிரந்தர தொற்றாக மாறும் கொரோனா – அடுத்த ஆண்டில் அறிவிக்க வாய்ப்பு

சிங்கப்பூரில் கொரோனா தொற்றினை ஒரு நிரந்தர நோயாக அடுத்த ஆண்டில் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனினும் இது தடுப்பூசி போடுபவர்களின் சதவீதத்தை பொருத்தே சாத்தியம் ஆகும் என்ற கூறியுள்ளனர்.

தற்போது வரை நாட்டில் 40% மக்கள் mRNA அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த எண்ணிக்கையானது 80% ஆக மாறும்போது கொரோனாவை நிரந்தர நோயாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

ஒரு வேளை நிரந்தர நோயாக அறிவிக்கப்பட்டால் சளி போன்ற நோய்களை போன்ற பட்டியலில் கோவிட் சேர்க்கப்படும். அதனால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பலாம். பெரிய நிகழ்ச்சிகளை நடத்தலாம். வேலையிடங்களுக்கு அனைவரும் செல்லலாம்.

தற்போது தனி நபர் பரிசோதனை போன்றவை நடைமுறைக்கு வந்துள்ளன. இவையெல்லாம் புதிய இயல்பு வாழ்க்கைக்கு தேவைப்படும். கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளவர்களை கண்டறிய மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தேசிய பல்கலைகழகத்தின் தொற்று நோய் பிரிவு பேராசிரியர் திரு.பால் தம்பையா கூறினார்.

Related posts